பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த 'வலுவான நடவடிக்கைகள் என்பவை தான் என்ன? முதலாவதாகவும் முதன் ை! யாகவும் உங்களது உறுதியான அபிப்பிராயம்தான், எழுத்தாளரை இதே பிரச்சினைகளை ஆயிரம் முறை சிந்தித்துப் பார்க்கவும், ஒவ்வொரு வாக்கிய அமைப்பை யும் பற்றியும் யோசனை செய்யவும், தமது நாவல் அல்லது கதையின் செய்தி மற்றும் கட்டமைப்பு ஆகியவற்றைப் பற்றி நன்கு சிந்திக்கவும், மக்கள் போராட்டத்துக்குக் கிளர்த்தெழவும், தீரமும் கெளரவமும் வீரமும் மிக்க செயல்களைப் புரிய அவர்கள் உத்வே கம் கொள்ளவும் செய்யக்கூடிய ஒரு வலிமைமிக்க தூண்டுதல் தன்மையைத் தமது நூலில் உருவேற்ற முயலவும் நிர்ப்பந்திக்கும். இது விஷயத்தில் உங்களது குரலே, வாசகர்களான தொழிலாளர்களின் குரலே, திட்டவட்ட மானதாக இருக்கும் என்று நான் நிச்சயமாகக் கூறுவேன். இலக்கியத்தைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கும் போது, நான் வேறொன்றையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இப்போது சில காலமாக வாசகர்கள் மத்தியில் ஒரு விசித்திரமான போக்கு நிலவி வந்துள்ளது; அது சாராம்சத்தில் தவறானது; அது எழுத்தாளர்களைக் குழப்புகிறது. உதாரணமாக, நீங்கள் இல்பெங்கோவின் பிரதான அச்சு என்ற நாவலைப் படிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், ஒரு ரயில் இஞ்சின்-கட்டுமான ஆலையின் ஏராளமான தொழிலாளர்களின் வாழ்க்கையை எடுத்துக்காட்ட முயலும் அது ஒன்றும் ஒரு மோசமான நாவல் அல்ல, கார்க்கி அதன் ஆசிரியருக்குச் சுட்டிக் காட்டிய தவறுகளை அந்த நாவல் கொண்டுள்ளது என்பதும் உண்மை. அது வெளிவந்த காலத்தில், அது பற்றி இலக்கிய வட்டாரங்களில் சூடாக விவாதிக்கப்பட்டது; என்றாலும், சோவியத் வாசகப் பொதுமக்கள் அனைவராலும் அது இன்னும் சரிவர உணர்ந்து பாராட்டப்படவில்லை என்றே நான் கூறுவேன், நல்லது. நீங்கள் இந்த நாவலை வாசிக்கிறீர்கள்; பிறகு இவ்வாறு கூறுகிறீர்கள்:

  • “நம்மைப்பற்றி, ரயில் இஞ்சின்-கட்டுமான ஆலைத் தொழி

லாளர்களைப் பற்றித் தாம் எழுதுவது நல்லது என்று கருதிய எழுத்தாளர் ஒருவர் இதோ இருக்கிறார் என்ற விஷயம் அற்புத மாக இல்லையா! இவர் கட்சி ஸெல்லை வருணிக்கிறார்; ஒரு முதிய தொழிலாளி தமது குடும்ப வாழ்விலும் ஆலையிலும் நடந்து கொள்ளும் விதத்தை விவரிக்கிறார்; என்றாலும், இவர் ஏன் நகரத்துக்கும் கிராமத்துக்கும் இடையே நிலவும் உறவுகளைப் பற்றி எதுவுமே கூறவில்லை? பல வாசகர்களும் விமர்சகர்களும் வெளிவரும் ஒவ்வொரு புத்தகத்தைப் பற்றி யு ம் இதே மாதிரியான கோரிக்கையைத் தெரிவிக்கவே முற்படுகின்றனர்.

23!

231