பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உதவவும் கூடிய விதத்தில், அனவ நமது நாட்டிலுள்ள வாசகர் களுக்கு மட்டுமல்லாது, வெளி நாடுகளிலுள்ள வாசகர்களுக்கும் ஓர் எச்சரிக்கை மணியோசையைப் போல் ஒலிக்கும் விதத்தில், நமது புத்தகங்களின் தாக்கத்தை நாம் எவ்வாறு அதிகரிக்க முடியும் என்பதையெல்லாம் பற்றி நாம் அனைவரும் திரும்பத் திரும்பத் தீவிரமாகச் சிந்தனை செய்தாக வேண்டும். இந்தப் புதிய பணிகள் மற்றொரு பிரச்சினையையும் எழுப்பு கிறது; ஓர் இளம் தொழிலாளி வர்க்க எழுத்தாளர் நமது மத்தியிலிருந்து உதயமாகிறார்; அவரிடம் நாம் பேரிலக்கியங்களி லிருந்து கற்றுக் கொள் ளுமாறு கூறுகிறோம்; ஆனால் அவர் எழுதும் முறை4ை. நம்மிடமிருந்தும் கிரகித்துக் கொள்வார், இங்கு, புதிய, சிறந்த புத்தகங்களைப்பற்றிக் கூறும்போது, குறிப்பாக அரும்பிவரும் இளம் எழுத்தாளர்கள் சம்பந்தமா கக் கூறும்போது, நான் இதனைக் கூற விரும்புகிறேன்: ஆரம்ப எழுத்தாளர்கள், அனுபவமிக்க எழுத்தாளர்கள் ஆகிய நம் அனைவரையும் எதிர்நோக்கியுள்ள முதன்மையான தேவை, நமது கதைப் பொருளை ஐயந்திரிபற ஆராய்ந்து கற்றறிவதே யாகும். இது தலையாய முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாகும்; தற்போதைய கூட்டத்தில் நாம் இதன் மீது நமது கவனத்தைக் குவித்தாக வேண்டும் என்று நான் கருதுகிறேன்; ஏனெனில் நீங்கள், எங்களது தொழிலாளி வாசகர்களான நீங்கள், எதார்த்த உண்மைகள் சம்பந்தப்பட்ட பிழைகளைத் தவிர்க்க எழுத்தாளர்களுக்கு உதவியாக எவ்வளவோ செய்ய முடியும், அன்றொரு நாள் நான் ஆலைத் தொழிலாளியாகவுள்ள ஓர் எழுத்தாளர் எழுதிய ஒரு கதையைப் படித்துப் பார்த்தேன். அதில் அவர் பஞ்சு போன்ற மென்மையான இறகுகளைக் கொண்ட மஞ்சள் நிற வாத்துக் குஞ்சுகள் ஆகஸ்டு மாத மத்தியில் தத்து நடை பழகித் திரிந்தன என்றும், கூட்டுப் பண்ணை விவசாயிகளுக்கு, அவர்கள் கதிரடிப்பைத் தொடங்கு வதற்கும் முன்பே ஊதியம் தானியமாகக் கொடுக்கப்பட்டது என்றும் கூறுகிறார். இதனை எழுதிய நபர், கணக்கில் கொடுக்கப் படும் ஊதியம், முதன் முதலில் முற்றும் தானியப் பயிரான ரை தானியக் கதிர்கள் அதிரடிக்கப்படுவதற்கு முன் னால் கொடுக்கப்படுவதில்லை என்பதையும், மஞ்சள் வாத்துக் குஞ்சுகள் ஆகஸ்டு மாதத்தில் தத்து நடை பழகித் திரிவதில்லை என்பதை பும் தெரிந்து கொள்ளவில்லை. இத்தகைய இலக்கியத்தைப் படிக்கும் கூட்டுப் பண்ணை விவசாயி ஒருவர் ** அட, என்ன

235

235