பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போராட்டம், தமது இதயங்களுக்கு மிகவும் நெருங்கியதாகும் என்று தமது கள்ளங்கபடற்ற, உளமார்ந்த முறையில் கோஸாக் ஆடவர்களும் பெண் களும் கூறுவதை நான் பலமுறை கேட்டிருக் கிறேன். எங்களது மக்கள் அந்தத் தற்கால நர மாமிச பட்சணி களான பாசிஸ்டுகளை, கொடிய பகைமையுணர்ச்சியோடு வெறுக்கின்றனர். பாசிஸ்டுப் பிற்போக்குக் கும்பலை எதிர்த்துப் போராடும் முன்னணியில் நிற்கும் தமது சோதரர்களின்பால் எங்களது மக்கள் பாசமிக்க அக்கறையுணர்ச்சியைக் கொண்டுள்ளனர், தோழர்களே, உங்களது வெற்றியில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு! எங்களது இதன்பங்களும் எங்களது பரிவுணர்ச்சிகளும் எப்போதும் உங்களுடனேயே உள்ளன. 1937 மக்களுக்கான ஒரு பிரதிநிதி சுலெய்மான் ஸ்தாவ்ஸ்கி மக்கள் கவிஞர் என்ற சொல்லின் அர்த்தபாவத்துக்கே இலக்கணமாக. , மக்களிடையே உருவாக்கி வளர்க்கப்பட்ட மக்கள் கவிஞர்களின் ரகத்தைச் சேர்ந்தவராக இருந்தார்; எனினும் அவர் சோவியத் ஆட்சி நிறுவப்படும் வரையிலும் அங்கீகாரம் பெறாமலே இருந்தார். அவரது நாட்டு மக்களின் எண்ணங்கள், அவர்களது இன்பங்கள், துன்பங்கள் ஆகியவை எல்லாம் இனிமையும், மயக்கும் புதுமையும், எளிமையும் மிக்க பாடல்-கவிதைகளின் வடிவத்தைப் பெற்றன. அக்கவிஞரின் திறமையால் வளம்பெற்ற அக்கவிதைகள், என்றென்றும் சிரஞ்சீவியாக வாழ்வதற்காக, மக்கள் மத்திக்கே திரும்பவும் போய்ச் சேர்ந்தன. என்றாலும், ஸ்தால்ஸ்கியின் கவிதைகள் மலைகளின் மீது அமைந்துள்ள அவரது தாய் நாட்டில் மட்டுமே பாராட்டப்பட வில்லை. மொழிபெயர்ப்பில் தமது மதிப்பை ஓரளவு இழந்து விட்டபோதிலும் கூட, அவரது கவிதை வரிகளைப் படித்த நம்மில் யார்தான், அவற்றின் வியத்தகும் எழிலையும் சொல் லாட்சியையும் கண்டு புளகிக்கவில்லை? எனவேதான் அவரது 4.மரணம் பற்றிய செய்தி நமது இதயங்களையும் அவ்வளவு தூரம் பிழிந்தெடுக்கிறது. ஏனைய எல்லா சோவியத் எழுத்தாளர்களோடும், சுலெய்மான். 'ஸ்தாவ்ஸ்கியின் எண்ணிறந்த ' வாசகர்களோடும் சேர்ந்து , மக்களுக்கான உண்மையான பிரதிநிதியாக விளங்கிய,

2 40 -

240