பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவனம் செலுத்தி எழுதக் கற்றுக் கொள்ளுமாறும், எப்போதுமே அவசரப்படாதிருக்குமாறும் அவர் எனக்கு ஆலோசனை கூறினார். நான் எப்போதும் அவரது அறிவுரையின்படி செயல்பட்டு வரவே முயன்றுள்ளேன். ஐந்தாண்டுகளுக்கு முன்னால் கட்சியும், அரசாங்கமும், சோவியத் பொது ஜன ஸ்தாபனங்களும் செராஃபிமோவிச்சின் 74 ஆவது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடின. ஒரு நபர் முதியவராக வளர்வது ஒரு வருத்தமான உண்மையாகும் என்றும், முதுமை கொண்டாட்டதுக்கு உரியதல்ல என்றும் கூறி, செராஃபிமோவிச் நம் எல்லோரையும் தடுத்து நிறுத்த முயன்றார். ஆயினும் சோவியத் எழுத்தாளர்களான நாம் இது விஷயத்தில் செராஃபிமோவிச்சோடு மாறுபடுகிறோம்; அதற் கா என ஓரே காரணம் அவரது இரும்பு வெள்ளம்தான் உள் நாட்டுப் போரைப் பற்றிய முதல் முக்கியமான நாவல் என்பதேயாகும். அந்த ஆண்டுகளில் நமக்கு வேறு எதுவுமே இருக்கவில்லை. பே) லும் அவரது ' இரும்பு வெள்ளம் (சோவியத் இலக்கியத்தின் தலைசிறந்த நூல்களில் ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. என்றாலும், தமது இரும்பு வெள்ளம் ஒன்றினால் மட்டுமே செராஃபிமோவிச் தம்மை நமது அன்புக்குரியவராக ஆக்கிக் கொள்ளவில்லை. சொாஃபிமோவிச் மூத்த தலைமுறையைச் சேர்ந்த 4 போல்ஷ்விக் எழுத்தாளர்களில் ஒருவராவார்; பிற்போக்குக் கும்பலின் அந்தகார இருளினூடே அவர் தமது கொள்கைத் தீபத்தை, அதன் சகல புனிதத்துவத்தோடும் ஏந்தி எடுத்துச் சென்றார்; பாட்டாளி வர்க்கத்தைப் பல பேர் காட்டிக் கொடுத்து வந்த அந்த மிக மிகக் கடுமையான ஆண்டுகளில், அவர் புரட்சிக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் விசுவாசமாக இருந்து வந்தார், அவரது ஸ் டெப்பி வெளியில் ஒரு நகரம் என்ற நாவ லும் சரி, அல்லது அவரது எண்ணிறந்த சிறு கதைகளும் சரி, நமக்குப் பழைய ரஷ்யாவின் அத்தாட்சி பூர்வமான சித்திரத்தை வழங்கவில்லையா என்ன? - செராஃபிமோவிச் ஒரு நீண்ட, பெரிய வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார். அவர் ஜாரிஸ்டுச் சிறைக் கூடங்களிலும் இருந்திருக்கிறார்; 'நாடு கடத்தப்பட்டும் வாழ்ந்திருக்கிறார். மூன்றாம் அலெக்சாந்தரைக் கொலை செய்ய முயன்ற லெனினது மூத்த சகோதரரோடும் அவர்.. பழகியிருந்தார். , பிராவ்தா நிருபர் என்ற முறையில், செராஃபிமோவிச் உள்நாட்டுப்

போரின் எல்லாப் போர்முனைகளுக்கும் சென்று வந்தார். '

242