பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை முழுவதையும், தமது வலிமைமிக்க திறமையையும் மக்களுக்கே அர்ப்பணித்திருந்த ஒரு பெரிய எழுத்தாளர் கால் மாகி விட்டார். அலெக்சி டால்ஸ்டாய் ஒரு தாராளமான ரஷ்ய உள்ளத்தை யும், தெள்ளத் தெளிந்த, பலதிறப்பட்ட திறமையையும் கொண் டிருந்த எழுத்தாளர். தமது சோவியத் தாயகத்தின் பால், சோவியத் மக்களின்பால், ஒரு ரஷ்யரின் இதயத் துக்கு அருமை யான எல்லாவற்றின்பாலும், தாம் கொண்டிருந்த அன்பை வெளியிடுவதற்கு அவர் இதயத்தை நெகிழ வைக்கும் எளிமை யான சொற்களைக் கண்டறிந்தார். ரஷ்ய மானிடனின்மீது, சோவியத் மக்களின்மீது அடிமையின் நுகத்தடியைப் பூட்ட முயன்ற பாசிஸ்டு அரக்கப் பிறவிகளைச் சாடுவதற்கு அவர் உணர்ச்சி வே கமிக்க, சுட்டெரிக்கும் கோபாவேச மிக்க சொற் களைக் கண்டறிந்தார், நமது நாடு அனுபவிக்க நேர்ந்த அந்த இருண்ட நாட்களில் இந்த எழுத்தாளர் எழுதிய அன்பும் நம்பிக்கையும் மிக்க சொற்கள் மக்களின் நன்றியுணர்வுமிக்க நினைவிலிருந்து என்றுமே அழிக்கப்பட்டு விடாது. 1945 இலக்கியத்தின் மாபெரும் நண்பர் சோவியத் மக்கள் ஆழமாக நினைந்து வருந்தும் மிக்கேல் இவானோவிச் கலி னின் மரணத்தினால், நமது இலக்கியம் அதன் மிகப்பெரும் நண்பரை, எழுத்தாளரது முயற்சியின் திறமை வாய்ந்த, கண்டிப்பான தீர்ப்பாளரை இழந்துவிட்டது.

  • ஒரு புனிதமான, இளமை ததும்பும் புதிய காதலோடு தமது

வாழ்நாள் முழுவதும் தாம் நேசித்தும், அற்புதமாகக் கற்ற றிந்தும் வந்த ரஷ்யப் பேரிலக்கியங்களால் வளர்த்து ஆளாக்கப் பட்ட மிக்கேல் இவானோவிச், தற்கால எழுத்தாளர்களின் படைப்புக்களிலும் மிகமிக உற்சாகமிக்க அக்கறையை எப் போதுமே கொண்டிருந்தார். நான் இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் அவரோடு உரையாடிக் கொண்டிருந்தேன். அப் ேபா து மிக்கேல் இவானோவிச் நான் என்ன எழுதத் திட்டமிட்டுக் கொண் டிருந் தேன் என்பதையும், அவர்கள் தமது நாட்டுக்காகப் போராடினார்கள் என்ற எனது நா வலை எழுதுவதில் நான் எவ்வாறு முன்னேறி யிருக்கிறேன் என்பதையும் பற்றி என்னிடம் கேட்டார். பிறகு

இவ்வாறு சொன்னார்:

252