பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதற்குள் அவசரக் கோலத்தில் தமது புத்தகத்தை எழுதி, வெளியிட்டும் விடுகிறார்கள்; இன்னும் மோசமான து என்ன வென்றால் ஒரே ஆண்டில் இரண்டு புத்தகங்களையும் கூட வெளிக் கொணர்ந்து விடுகிறார்கள். அந்தப் புத்தகங்கள் ஒவ்வொன்றின் ஆயுட் காலமும் ஒரு நாளுக்கு மேல் நீடிப்பதில்லை, நாம் இன்று அதைப் படித்துப் பார்ப்போம். ஆனால் நாளையே அதன் பிரதானப் பாத்திரங்கள்-- அ ைவ யாரோ க ா ப ட னா க, லெப்டினெண்டாக, அல்லது ஒரு யுல தியாக இருக்கலாம்-அவர் களின் பெயர்களையும் நாம் மறந்து விடுகிறோம்; அந்தப் புத்தகம் எதைப் பற்றியது என்பதும் கூட. நமக்கு மறந்து போய் விடுகிறது. அதில் வருகின்ற நபர்கள் உண்மையான வர்க ள் அல்ல; அவர்கள் மங்கலான, பூத உடலற்ற ஆவியின் நிழல்களான சுவே உள்ளனர்; பின்னர் அவற்றை ஒருவர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? மேலும் இதனோடு ஆசிரியரின் வளமற்ற மொழியும், நாவலின் செம்மையே இல்லாத வடிவமும் சேர்த்துக் கொண்டால், பிறகு அதனை நினைவில் வைத்திருப்பதில் அர்த்தமே இல்லை, இதன் விளைவாக, அச்சகம் மற்றும் பதிப்பு:கத்தின் ஊழியர் களது முயற்சிகள், காகிதம், பணம் எல்லாமும் வீணாகின்றன. இதே போல் வாசகர்களின் பொன்னான நேரமும் வீணாகிறது.

  • 'அன்றொரு நாள் எனக்கு ஒரு நூலாசிரியரிடமிருந்து ஒரு

கடிதமும், பிரதேசப் பதிப்பகம் ஒன்றினால் வெளியிடப்பட்டுள்ள அவரது தடியான புத்தகம் ஒன்றின் பிரதியும் வந்து சேர்ந்தன. அந்த நூலாசிரியர் தம் து! கடிதத்தில் எழுத்தாளர் யூனியன் தமக்கு அநீதியிழைத்து விட்டதாகவும், ஏனெனில் அது அவரது புத்தகத்தை ஸ்டாலின் பரிசுக்குச் சிபாரிசு செய்யவில்லை என்பதாகவும், ஆனால் உண்மையில் அது அந்தப் பரிசுக்குத் தகுதி யான தாகவும் எழுதியிருந்தார். என் கண்கள் சரியாக இல்லை; என்றாலும் அந்தப் பெரிய புத்தகத்தை நான் முழுக்கப் படித்துப் பார்த்தேன். நான் அதனைப் படித்துப் பார்த்தேனே தவிர, அந்த நூலாசிரியருக்குப் பதிலே எழுதவில்லை, "* மிக்கேல் இவானோவிச் விரக்தியோடு கையை அசைத்தார்; பிறகு புன்னகை புரிந்தார். நான் அப்படிச் செய்திருக்கக் கூடாது என்பது எனக்குத் தெரிகிறது. ஆனால் நான் தான் என்ன செய்வது? ஸ்டாலின் பரிசு கிடக்கட்டும், அந்தப் புத்தகம். வெளியிடுவதற்கே தகுதியற்றதாகவே இருந்தது. எனவே எந்த விதத் திறமையும் இல்லாத, என்றாலும் தற்பெருமைக்கு மட்டும் பஞ்சமே இல்லாத அந்த ஆசிரியருக்கு நான் என்ன பதில் எழுத முடியும்? என்னை யும்கூட அவர் நம்புவார் என்று நான் எண்ண

25 4 1

254