பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிகமிக உற்சாகம் மிக்க வரவேற்பைப் பெற்றுதுமால் ஏராள மான புத்தகங்களை உருவாக்கித் தந்தது. என்றாலும், வருங் காலத்தில் அளவிடற்கரிய விதத்தில் நாம் இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டியுள்ளது. எப்போதும் போலவே, புத்தாண்டு நாளில் நமது சிந்தனை கள் நம்பிக்கைகள் யாவும் வருங்காலத்தை நோக்கியே திரும்பியுள்ளன. வாழ்க்கையில் நமது பணியும் நோக்கமும், நமது மாபெரும் சகாப்தத்துக்கும் மாபெரும் சோவியத் மக்களுக்கும் தகுதி படைத்ததாக விளங்கும் உன்னதமான சித்தாந்தச் செய்தியை யும், மிக வுயர்ந்த கலைநயத் தகுதிகளையும் கொண்ட இலக்கியப் படைப்புக்களைப் படைப்பதும், சமாதானத்தைப் பாதுகாப்பது மேயாகும், உங்களது ஆக்கபூர்வமான முயற்சியில் (எல்லாவிதமான வேலையும் எப்போதும் ஆக்கபூர்வமானவையே எல்லா வெற்றி யும் பெறவும், அதேபோல் உங்களது சொந்த வாழ்வில் மகிழ்ச்சி பெறவும், நாங்கள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான புத்தாண்டு வாழ்த்துக் கூறுகிறேன். 1955 இனோஸ்த்ரன்னயா லித்தரத்துரா"' சஞ்சிகை ஆசிரியர்களுக்கு ஒரு கடிதம் அன்பார்ந்த ஆசிரியத் தோழரே. உங்கள் சஞ்சிகையின் முதல் இதழை நான் இப்போதுதான் படித்து முடித்தேன்; அது தனக்குத்தானே நிறுவியுள்ள பணிகள் தகுதியானவை என்றே நான் கருதுகிறேன். ஏனைய தேசங்களின் இலக்கியங்களை நன்கு அறிந்து பாராட்டுவதில் சோவியத் மக்களுக்கு உதவ இந்தச் சஞ்சிகை முன்வந்துள்ளது. இது சம்பந்தமாக, எ ன க் கு அத்தியாவசியமாகத் தோற்றும் சில விஷயங்களை நான் எழுப்ப விரும்புகிறேன். நான் நமது சர்வதேசக் கலாசார உறவுகளையும், சோவியத் எழுத்தாளர் களுக்கும் அ ய ல் நாட்டு எழுத்தாளர்களுக்கும் இடையே நிகழ்ந்துவரும் பரந்துபட்ட அனுபவப் பரிவர்த் தனையையும் கருத்தில் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு தேசமும், அது பெரிதாயினும் சிறிதாயினும்,

தனது சொந்தக் கலாசார மதிப்புக்களைக் கொண்டுள்ளது.

281