பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலாசார அபிவிருத்தியின் உலக வளர்ச்சிப் போக்கில் சோவியத் இலக்கியமும் கலையும் வகித்து வரும் போர்க்குணம் மிக்க பாத்திரத்தை, எல்லாவற்றுக்கும் முதன்மையாக, நமது கலைஞர்களின் தலைசிறந்த படைப்புக்களில் குடி கொண்டுள்ள கம்யூனிசச் சித்தாந்தம் மற்றும் சார்புநிலை ஆகிய வற்றின் வேகம்தான் தீர்மானிக்கிறது. இந்தத் தன்மைதான் நமது சித்தாந்த எதிரிகள் மத்தியிலும், அவர்களது கட்டாளி களான திரிபுவாதிகள் மத்தியிலும் கோபாவேசத்தைக் கிளறி விடுகிறது. சோஷலிசத்துக்காகவும் கம்யூனிசத்துக்காக வும் திடமான உறுதியோடு போராடும் போராளிகளான நமது தெள்ளத் தெளிவாக வரையறுக்கப்பட்ட நிலை களிலிருந்து விலகிச் செல்லுமாறும், கட்சி மற்றும் மக்களது நலன்களுக்குப் பணி "யாற்றும் நமது அடிப்படைக் கோட்பாடுகளைக் கைவிடுமா முகம் நம்மை தூண்டுவதற்கே அவர்கள் விரும்புவார்கள், சோஷலிச எதார்த்தவாதத்தைக் கவிழ்க்கப் போவதா கக் கங்கணம் கட்டிக் கொண்டுள்ளவர்களில், பிரசித்தமானவர் முன் னாள் ஆஸ்திரியக் கம்யூனிஸ்டான ஃபிஷ்ஷெர்' என்பவரா வார், *'பரிபூரண மான, முற்றிலும் கட்டுப்பாடற்ற சுதந்திரம் பற்றிய பேர் போன நிபுணரான இவர், நமது சோவியத் கலையை மிகப் பெரும் ஆர்வவேகத்தோடு சபித்துத் தீர்க்கிறார். சோவியத் யூனியனில் கலையானது விலங்கிடப்பட்டு, “கட்டுண்டு கிடப்பதாக அவர் கூறுகிறார்; இது அவரை மிகவும் வருத்த 'முறச் செய்கிறது. நமது கலையை விலங்கறுத்து, அதனைச் சார்பு நிலையிலிருந்து , சமுதாயத்துக்குப் பணியாற்றும் அதன் உன்னத மான கடமையிலிருந்து விடுவிப்பதையே அவர் பெரிதும் விரும்புவார், இந்த ஃபிஷ்ஷெரும் சரி, வெளிநாடுகளிலுள்ள ஏனைய 'ஃபிஷ்ஷெர்களும் சரி, கங்குகரையறியாத எதார்த்தவாதம் எனப்படும் கலங்கிய சேற்று நீரிலிருந்து, அப்பாவியான உள்ளம் படைத்த கெண்டை மீன் களைத் தம்மால் எவ்வளவு அதிகமாகப் பிடிக்க முடியுமோ அவ்வளவு அதிகமாகப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, தூண்டில் முள்ளில் முடை நாற்றம் நா றும் இரையைச் சொருகித் தமது தூண்டில்களை வீசி ' வருகிறார்கள். ஆனால் இத்தகைய நம் பிக்கையூட்டும் கெண்டை மீன்கள் நம்மிடம் மிக மிகக் குறைவாகவே இருக்கின்றன; எனவே சாமர்த்தியசாலிகளான இந்த மீன் பிடிப்பாளர்கள் நடத்தும் மீன் வேட்டை மிகப்பெரும் ஏமாற்றமாகவே முடியும்; : : . 389