பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்களே நமது நம்பிக்கை. நீங்கள்தான் நமது வருங்காலம். உங்களிற் பலர் ஏற்கனவே ஒரு நிகழ்காலத்தைப் பெற்றிருக் கிறீர்கள்; உங்கள் அனைவருக்கும் ஒரு வருங்காலம், எழுத்தாள் ரின் வருங்காலம் உண்டு. ஓர் அற்புத மான மக்களின் அற்புதமான பிரதிநிதிகள் நீங்கள் தான். எனது அன்பார்ந்த நண்பர்களே, நான் உங்களுக்கு நல்வாழ்த்துக் கூறுகிறேன்; நீங்கள் வெற்றி. பெறவும் மாபெரும் சாதனைகளைப் புரியவும் வாழ்த்துகிறேன்...... 1955 இளம் எழுத்தாளர்களின் மூன்றாவது அகில - - யூனியன் காங்கிரசில் ஆற்றிய உரை” ----- நமது எழுத்தாளர் யூனியன் தலைமைப் பீடத்திலுள்ள என, நண்பர்கள், இளம் எழுத்தாளர்களுக்கு நான் ஏதாவது “ஆடி மா ன' விஷயத்தைச் சொல்ல வேண்டுமென்று என்னை வற் புறுத்தும்போது என்னை மிகவும் தர்மசங்கடமான நிலைக்கு உள்ளாக்கி விடுகின்றனர், - ஆழமாக என்றால், திட்டவட்டமாக எதைத்தான் குறிப்பிடுகிறீர்கள்? “ஓ! அதுவா? நல்லது. ஓர் எழுத்தாளரின் பணி ஒன்றும் எளிதானதல்ல; அது சமயங்களில் மிகவும் கடினமாக இருக்கும்; அது ஒரு புனிதமான லட்சியம்-அப்படி இப்படியென்று அவர் களுக்குக் கூறுங்களேன். நல்லது. இதோ நானும் இங்கு வந்துவிட்டேன்; இப்போது என்ன நிகழ்கிறது? என்முன்னால் மிகவும் திறமை படைத்த, மிகவும் திறன்மிக்க 380 இளம் எழுத்தாளர்களே உள்ளனர். இத்தகைய திறன் மிக்க நபர் களுக்கு நான் ஆரம்பக் கூறுகளைப் பற்றி உபதேசம் செய்யப் புகுந்தால் அதில் அர்த்தம் ஏதேனும் உண்டா ? எனவே சமதையான ஒருவன் சமதையா ன மற்றவர் சளோடு பேசுவதுபோலத் தான் அவர்களிடம் நான் பேசப் போகிறேன். இலக்கியத்தையும் இந்தத் தற்போதைய மாநாட்டையும் பொறுத்த வரையில் இங்கு பேசிய தோழர் அஷயோவோடு சில விஷயங்கள் மாறுபடுகிறேன்" என்பதை நான் கூறியாக வேண்டும், உதாரணமாக, தமது பேச்சில் அவர் ஏதாவதொரு புத்த கத்தைப்பற்றி நல்ல விதமாகப் பேசி வரும்போதே, ஏதாவது சில்லறை விஷயங்களைக் கிளப்பி, சுவாரசியத்தைக் கெடுப்பது அத்தியாவசியம் என்று உணர்கிரே, அந்த விஷயம் தான் 393