பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • என் விஷயத்தில் ஒரு லெனின் பரிசைப் பெறுவதை, ஒரு

கடந்துபோன கட்டமாகவே கருத முடியும். அடுத்த ஆண்டில் ஓர் இளம் எழுத்தாளர் (ஒருவருக்கும் அதிகமாக இருந்தால் மிகவும் நல்லது) எனது இடத்தில் நின் று கொண்டிருப்பதைக் காணவே நான் விரும்புவேன். மூத்த தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்களான நாங்கள் எங்களது இலக்கிய வாழ்க்கைத் தொழில்களில் முதன்முதலாக ஈடுபடத் தொடங்கிய காலத்தில், அபரிமிதமான கவனத்தோடு நாங்கள் பேணி வளர்க்கப்படவில்லை-பரிசுகளும் ஊக்குவிப்புக் களும் எங்கள் மீது பொழியப்படவில்லை, இதனால் இலக்கியத் துறைக்குள் அனுமதிப்பது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது என்று நான் கூற வரவில்லை, ஆனால் நிகழ்ந்து வருவது என்னவெனில், முதியவர் களின் இடத்தில் இளையவர்கள் இடம் பெற்றுவரும் தர்க்க ரீதியான வளர்ச்சிப் போக்குத்தான். மேலும் நான் இந்த மேடையில் இளைஞர் கள் ஏறி வரவேண்டும் என்பதையே ஆதரிக்கிறேன். நான் மீண்டும் மற்றொரு லெனின் பரிசை என்றுமே பெற மாட்டேன்" என்று தாராளமாகக் க ரு த க் கூ டு ம்: என்றாலும், இவ்வாறு கூறு வதன் மூலம், இலக்கியத் துறையில் நான்' வகித்து வரும் ஸ்தானத்தை ஒரு போராட்டத்தை நடத்திப் பார்க்காமல் விட்டுக் கொடுத்து விடுவேன் என்று அர்த்தமாகாது! நான் இங்கு மூத்த தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர் களான எனது தோழர்களைக் காண்கிறேன்; வாழ்க்கை அனுபவத்தையும் இலக்கிய அனுபவத்தையும் மிகவும் பெற்றுள்ள நாங்கள், எங்களது ஸ்தானங்களைப் போராடாமல் விட்டுக் கொடுப்பதென்பது, எங்களுக்குத் தகாது என்றே நான் கருதுகிறேன். எங்களது இடங்களில் இளைஞர்கள் இடம் பெறுவதையே நான் முழுமையாக ஆதரிக்கிறேன்; என்றாலும் அவர்கள் எங்களோடு சரிசமமாக முன்னேறி வந்து இடம் பெறுவதற்கு முன்னால், முதலில் அவர்கள் சற்று அரும்பாடுபட்டு உழைக்கட்டும், நான் இங்கு முந்திய ஆண்டுகளில் லெனின் பரிசு பெற்றவர், களைக் காண்கிறேன்; பரிசு வழங்கும் விழாவின் போது அவர் களும் பிரசன்னமாக இருப்பது ஒரு மர டாகவே மாறினால், அது ஒன்றும் மோசமான காரியமாக இராது. அடுத்த ஆண்டில் நமது இளம் எழுத்தாளர்களில் ஒருவர் இந்தத் தகுதிமிக்க' பரிசைப் 401