பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யூனியனின் வலிமை யுத்தகால வீரச் செயல்களின் மீது மட்டும் கட்டியமைக்கப் பட்டிருக்கவில்லை, வயல்களிலும், கூட்டுப் பண்ணைகளிலும், அரசாங்கப் பண்ணைகளிலும், தொழிற்சாலை களிலும், நிலக்கரிச் சுரங்கங்களிலும் ஆற்றப்பட்டு வரும் நேர்மையான பணியை ஒதுக்கிவிட முடியுமா? நமது நாட்டின் பொருளாதார வலிமையும் சித்தாந்த பலமும் அன்றாடம் புரியப் படும் லட்சோப லட்சக்கணக்கான கவர்ச்சியற்ற உழைப்புச் சாதனைகளின் மூலமே உருவாகியுள்ளன. வீராவேசச் செயல் களின் நோக்கிலிருந்து பார்த்தால், யுத்தக் காலத்தில் புரிந்த வீரச் செயல்கள் மிகவும் கவர்ச்சிகரமாகத் தோன்றின என்பது உண்மையே. என்றாலும் போர்கள் என்றும் எதையும் படைத்துக் கொடுத்ததில்லை என்பதை நான் உங்களுக்குக் கூறியாக வேண்டும், போர் ஓர் அழிவுச் சக்தி; ஆனால் உழைப்போ ஓர் ஆக்கச் சக்தி, தொழிலாளர்களும், விவசாயிகளும், அறிவாளி களும் வீரஞ்செறிந்த முயற்சிகளை மேற்கொள்ளாது போயிருந்தால், மாபெரும் தேச பக்தப் போரினால் விளைந்த பல இடிபாடுகள் இன்னும் அப்படியேதான் இருந்து வந்திருக்கும். நன்றாகப் படிப்பதும் கூட ஒரு வீரச் செயல்தான். - - தமது காலத்தில் தான் எல்லாமே மிகவும் நன்றாக இருந்தன என் று சொல்லிக் கொள்வது முதியவர்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயம். இதனையெல்லாம் ஒருவர் முழுமையாக நம் பி ஏற்றுக்கொண்டுவிடக் கூடாது. என்றாலும் சில விஷயங் களில் அவர்கள் கூறுவதை ஒப்புக் கொள்ளாமல் இருக்க முடியாது. மூத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தமது சொந்த அளவுகோல்களையும் தர அளவைகளையும் கொண்டிருந்தனர். இப்போது அவர்களில் ஒருவனான எனக்கு, குட்டி வைக்கோல் போர்களைப் போல் தோற்றமளிக்கும் இந்த நவநாகரிகச் சிகை அலங்காரங்களின் மீது எந்த வெறுப்பும் இல்லை, அடிப்படையில் நமது இளம் மக்கள் நல்லவர்களே. அஸ்ஸியாத் அல்கோவா இப்போ து வீரச் செயல்களைப் பற்றி என்னிடம் கேட்டார். இது தான் முக்கியமான விஷயம்; சிகை அலங்காரங்கள் அல்ல, எனது காலத்தில், உள்நாட்டு யுத்த ஆண்டுகளில், எங்களது வாழ்க்கை வீரஞ்செறிந்த இளமை வாழ்க்கையாகவே இருந்தது. கடுமையான சோதனைகள் எதிர்ப்படும்போது நமது . இளைஞர்கள் மீண்டும் வீரஞ்செறிந்தவர்களாகவே விளங்குவர், - ஆயினும் நமது இளைஞர்கள் மத்தியில் மேலை நாட்டுப் பிரசாரத் தின் செல்வாக்குக்கு இரையாகும் நபர்களும் உள்ளனர். அயல் நாட்டுச் சித்தாந்தவாதிகள் உங்கள் மத்தியில் 'சம்சயத்தையும் அலட்சியத்தையும் விதைக்க விரும்புகின்றனர். என்றாலும், நமது நாட்டின் வருங்காலத்துக்கும், மூத்த தலைமுறையினரால் 427