பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எய்தப் பெற்றுள்ள எல்லாவற்றுக்கும் நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டியவர்கள் ஆவீர். எவருனடய தும் அல்லாத * * இளமை என்று எத்தகைய விஷயமும் கிடையாது என்பதை நாம் மிக நன்றாக அறிவோம், மேலும், உங்களைப் போன்ற அருமையான யுவதிகளை, அட்டுப் பிடித்த, அன்னியக் கரங்களுக்குள் ஒப்படைப்பது என்பதும் நமக்கு அடியோடு ஒத்து வராத விஷயமாகும். முதலாளித் துவத்தின் செல்வாக்குக்கு எதிராக நாம் செலூக்கமிக்க போராட்டத்தை நடத்தி வருகிறோம், முதலாளித்துவக் சித்தாந்திகள் நமது திரையரங்குகளுக்குள் புகுந்து விடும் மோசமான திரைப்படங்களாலும், விளக்க முடியாத ஏதோ காரணத்துக்காக நமது பதிப்பகங்கள் வெளியிட்டு வரும் தீங்கு பயக்கும் புத்தகங்களாலும், உங்களைச் சீர்குலைக்க முயன்று வருகின்றனர், சோவியத் எழுத்தாளர்களா' 617 நாங்கள் நமது இளைஞர்களை, நமது சித்தாந்தம், மற்றும் வாழ்க்கை யையும் கலையையும் பற்றிய நமது கம்யூனிஸ்டுக் கருத்துக்கள் ஆகியவற்றின் உணர்விலேயே பேணி வளர்த்து வரப் பாடுபட்டு வருகிறோம். ஒரு பள்ளிக்கூடம் மக்கச்சகலாவிலோ, பெஸ்ச, * கோப்ஸ்கோயியிலோ, வெஷென்ஸ்காயாவிலே!! அல்லது வேறு எங்கணுமோ இருந்தாலும் சரி, அங்குள்ள மாணவர்களுக்குச் சர்வாம்சமான கல்வியை வழங்கியாக வேண்டும்: இது சினிமா, நாடகம், இலக்கியம் போன்ற பண்பை உருவாக்கும் செல்வாக்குகளையும், எல்லாவற்றுக்கும் முதன்மையாக, பள்ளிப் பாடங்களையுமே குறிக்கும். நமது பரந்த நாட்டுக்குப் புத்திக் கூர்மையும், கடின உழைப்பும், சிக்கனமும் மிக்க திறமையாளர் களாக விளங்கக் கூடிய நபர்கள் தேவை. இப்போது நீங்கள் தலைக்குமேல் குண்டு வீச்சு விமானங்கள் ஏதும் இரைந்து கொண்டிருக்காத அமைதியும் பந்தோபஸ்தும் நிலவும் சூழ்நிலையில் ஒன்றாகக் கூடியமர்ந்து, வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் பற்றிய நமது பிரச்சினை களை , நமது வருங்காலத்தை, சொல்லப் போனால், உங்களது வருங்காலத்தைக் குறித்து விவாதித்துக் கொண்டிருக்க முடியும் விதத்தில், நமது தலைசிறந்த மக்களில் லட்சோப லட்சக்கணக்கான பேர்கள் உள்நாட்டு யுத்தத்திலும் மாபெரும் தேசபக்தப் போரிலும் மாண்டுபட்டனர். சோவியத் ஆட்சியின் ஆதாயங்கள் மிகப் பெரும் விலையைக் கொடுத்துத்தான் பெதப் பட்டன. எனவேதான் நமது நாட்டை அதன் கணக்கிடற் கரிய ஆன்மிக மற்றும் பொருளாய்தச் செல்வங்கள் அனைத்தையும் 428