பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. ஏனைய பிரதிநிதிகள் என்ன உணர்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது; ஆனால் என்னைப் பொறுத்தவரையில், எனது அருமையான பழைய நண்பரான இலியா கிரிகோ ரியேவிச் இரென்பர்க் இங்கு இல்லாததைக் கண்டு நான் மிகவும் மனவேதனைப் படுகிறேன், நான் என்னைச் சுற்றிலும் திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்; ஆனால் இலியா" இரிகோ ரியேவிச்சை நான் காண முடியவில்லை; அவர் இங்கேயே இல்லை; இங்கு இருந்தாக வேண்டிய ஏதோ ஒன்று இல்லாது போய்விட்டதுபோல், இது ஏதோ ஒருவிதமான சங்கடமான மனோ உணர்வை எனக்கு ஏற்படுத்துகிறது; எனது அடி வயிற்றுக்குள் ஓர் உறுத்தும் வேதனை தோன்றுகிறது; மற்றபடி இருள் சூழாத எனது மனோநிலையில், வருத்தம் ஒரு கருநிழலைப் பரப்புகிறது. 'இரென்பர்க் எங்கே போனார்? காங்கிரஸ் தொடங்கவிருந்த தருணத்துக்கு முன்னால், அவர் இத்தாலியக் கடற்கரைக்குக் கப்பலேறிச் சென்றுவிட்டார் என்று தெரிய வருகிறது. அவர் செய்தது ஒரு விசித்தரமான காரியம் தான், எந்தவொரு தொழில் பட்டறையையும் சேர்ந்த கைவினைத் தொழிலாளர்கள், தமது சொந்தக் கெளரவத்தைப் போற்றி வருவதோடு மட்டுமன்றி, தமது தொழில் பட்டறையின் கெளரவத்தையும் போற்றி வரவேண்டும்; மேலும், அவர்கள் தமது தொழிலிலும் பெருமை கொள்கின்றனர், இலியான கிரிகோரியேவிச் நம் அனைவரையும் புண்படுத்தியிருக்கக் கூடாது. ஒரு கூட்டமைப்பில் ஒருவர் தம்மைப் பிறர் அனைவருக் கும் மேலானவராகக் கருதிக் கொள்ளவும், நான்தான் அதிகாரி; என்னிடம் ஒன்றும் எதிர்வார்த்தை பேசக் கூடாது! என்று கூறும் சிடுசிடுப்புக் குணம் படைத்த மாமியாரைப்போல் நடந்து கொள்ளவும் கூடாது. இவையனைத்தையும் பற்றிய மற்றொரு வருந்தத்தக்க விஷயம் என்னவெனில், மோசமான உதாரணங்கள் பின் பற்றப்பட்டு வருகின்றன; பொது வாழ்க்கையின் நியதிகளை இரென்பர்க் மீறியுள்ள விதத்தைக் கண்டு தைரியம் பெற்றவர் களாய், நமது வயதில் முதிர்ந்த இளம் எழுத்தாளர்கள் சிலர் ஏற்கெனவே தாவிக் குதிக்கத் தொடங்கியுள்ளனர்; அவர்கள் உண்மையிலேயே வளர்ந்து ஆளாகும்போது, இதனை நினைந்து அவர்கள் வெட்கித் தலை குனியவே செய்வர். இளைஞர்களுக்கு ஏற்ப, நாம் கடந்து போன தை நினைவு கூர்ந்து விட்ட பின்னர், நாம் வருங்காலத்தில் நமக்கு என்ன காத்திருக்கிறது என்பதைக் காண்போம். 432