பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1930 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில், மத்திய ரஷ்யாவி லுள்ள ஒரு சிறு நகரத்துக்குச் சென்றுவிட்டுத் திரும்பிவந்த ஃபதயேவ், என்னிடம் கூறிய ஒரு சம்பவத்தை இப்போது கூறுகிறேன். அவர் என்னிடம் இவ்வாறு கூறினார்: அங்கு நான் காண விரும்பிய ஒரு புராதனமான பாதிரியார் மடம் இருந்தது. நல்லது. நான் . அங்கே சென்றேன்; அதனைப் பார்த்தேன். அந்த மடத்துக்குள் மிகவும் பழைமையான, சிதிலமடைந்த ஒரு சிறு. தேவாலயம் இன்னும் செயல்பட்டு வந்தது. நகரத்துக்குத் திரும்பி வரும் வழியில், அந்த மடத்தைச் சுற்றியிருந்த பள்ளத்தின் சரிவில் ஆரவாரமாகச் சத்த மிட்டு விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு சிறுவர் கூட்டத்தைப் பார்த்தேன். அதே சமயத்தில், இந்த வேடிக்கையையெல்லாம் பொறாமையுணர்ச்சியோடு சற்றுத் தூரத்தில் நின்று கவனித்துக் கொண்டும். ஆயினும் அருகில் நெருங்கிவரத் துணியாமல், வாடிப்போன புல்லைப் பலம்கொண்ட மட்டிலும் இழுத்துப் பிடுங்கி மகிழ்ந்தவாறும், தரையைத் - தனது காலடியால் மிதித்துத் துவைத்தவாறும் இருந்த ஒரு சிறுவனையும் கண்டேன். பாவம், சிறுவன், இவன் செய்த ஏதோ தவறினால் இவனை விளையாட்டிலிருந்து நீக்கிவிட்டார்கள் போலிருக்கிறது என்று நினைத்தேன். இதன்பின் அவனருகே சென்று இவ்வாறு கேட்டேன் : * நீ ஏன் இங்கு தன்னந்தனியாக நின்று கொண்டிருக்கிறாய்? நீ ஏன் மற்றவர்களோடு சேர்ந்து விளையாட வில்லை? நீ என்ன தவறு செய்தாய்?' அந்தப் பையன் என்னை ஏறிட்டுப் பார்த்தான்; அவனது கண்களில் ஒரு முதிர்ந்த வேதனை குடிகொண்டிருப்பதை நான் கண்டேன். ' என் தந்தை ஒரு பாதிரியார். அவர் இந்தத் தேவாலயத்தில்தான் பாதிரி யாராக இருக்கிறார். எனவே தான் அந்தப் பையன்கள் என்னைத் தமது விளையாட்டில் சேர்த்துக்கொள்ள மறுக்கிறார்கள். அதனால் நான் தன்னந்தனியாகவே விளையாட வேண்டியிருக் கிறது' என்று என்னிடம் கூறினான் அவன். இதன் பின் ஃபத்யேவ் மௌனமானார்; பிறகு அவர் விசித்திரமாகக் கீச்சிட்டுப் போன குரலில் என்னிடம் பின் வருமாறு கூறியது எனக்கு நினைவிருக் கிறது. 'பிறகு நான் என்ன செய்தேன், தெரியுமா? நான் அழுதேன் ; முகத்தைத் திருப்பிக் கொண்டு . அழுதேன். இது எத்தனை பயங்கரமான பிள்ளைப் பருவம்!' என்று கூறினார் அவர், என்றாலும், அவர் எப்படி. கதையை முடிப்பார் என்று எதிர் பார்க்கலாமோ, அப்படிக் கூறியேதான் அவர் தமது கதையை முடித்தார் என்பதும் உண்மைதான். அவர் இவ்வாறு தான் கூறி முடித்தார்; 4'என்றாலும், பெரியவரே, எல்லாச் சண்டாளர் இ. 45-,2 & 433