பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறையாகக் குண்டுகளைப் பொழிந்து வருகின்றனர். ஏற்கனவே அதில் பாதியை அவர்கள் தரைமட்டமாக்கி விட்டனர். மிஞ்சி யுள்ள குடிசைகளும் எப்படியும் அழியத்தான் போகின்றன என்ப தால், அவற்றை இங்கு கொண்டு சேர்க்குமாறு ஸாப்பர்க ளுக்கு ஜெனரல் உத்தரவிட்டார். ஸாப்பர்களும் இந்தக் காரியத்தை இரண்டே நாளில் செய்து முடித்து விட்டனர். இப்போது நாங்கள் இங்கு இருந்து வருகிறோம். செயலூக்கமும், நகைச்சுவையும் மிக்க மனிதரான பீரங்கிப் படைத் தளபதி கர்னல் குரோசித்ஸ்கி அறைக்குள் வந்தார்; அறிமுகங்கள் முடிந்த பின், போர் முனையின் இந்தப் பகுதியில் நிலவும் நிலைமையைப்பற்றி அவர் எங்களிடம் கூறினார்:

  • 'எதிரியை நாங்கள் நன்றாக நெருக்கிக் கொண்டிருக்

கிறோம். இன்று மதியம் நாங்கள் தயாரிப்புக்கான குண்டு வீச்சையும், பின்னர் தாக்குதலையும் தொடங்குவோம். நீங்கள் வரும் வழியில் பார்த்த மலையை இங்கு குத்ரியாவயா (சுருட்டைத்தலை-மொ. பெ.) குன்று என்று சொல்வது வழக்கம்; இப்போதோ அதற்கு லைசாயா (வழுக்கைத்தலை-மொ. பெ.) குன்று என்று மறுபெயரிடப்பட்டுள்ளது. எங்களது பீரங்கிப் பிரயோகத்தால் அது உண்மையிலேயே வழுக்கையாக மாறி விட்டது; ஆனால் அது காடுகள் நிறைந்து காணப்பட்ட ஒரு காலமும் உண்டு. ஜெர்மானியர்கள் கீழே விட்டெறிந்து வரும் துண்டுப் பிரசுரங்களே, எங்களது இந்தப் பீரங்கிப் பிரயோகம் எத்தனை பயன்மிக்கது என்பதற்குப் போதிய சான்றாகும். 'சோவியத் காலாட்படை வீரர்களே, சரணடைந்து விடுங்கள்! சோவியத் பீரங்கிப் படை வீரனே, நாங்கள் வந்து உன்னைப் பிடிக்குமாறு விட்டுவிடாதே!' என்று அவை கூறுகின்றன. நாங்கள் ஒன்றும் எங்களை அவர்கள் பிடித்துக் கொள்ளுமாறு விட்டுக் கொண்டிருக்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்; மாறாக, அதனைப் பிடிக்க அவர்களை விட்டுக் கொண்டிருக்கத் தான் நாங்கள் முயன்று கொண்டிருக்கிறோம். மேலும், நாங்கள் எல்லாவற்றையும் சரியாகவே செய்து வருகிறோம். நாங்கள் நமது காலாட்படை இருக்கும் இடத்தில், முன்னணியில் எங்களது நோட்டம் பார்க்கும் வீரர்களை விட்டுவைக்கிறோம். அவர்கள் இலக்குகளைக் கண்டறிந்து கூறுகிறார்கள். எங்கள் கோஷ்டி 'அற்புதமாக வேலை செய்கிறது: ஜெர்மன் பீரங்கிகள், சிறு பீரங்கிகள், பதுங்கு குழிகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாகத் தகர்க்கப்பட்டு வானில் தூள் பறக்கின்றன! அவர்கள் தமது பதுங்கு குழிகளின் மீது கட்டைகளை - மூன்று

அடுக்குகளாக அடுக்கித்தான் அவற்றுக்குக் கூரை போட்டுக்

78