பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தளங்கள் பார்கள் என்று பெரும்பர் 2 தளங்களையும், மற்றும் பிற பொருள்களையும் எங்கெங்கே லைத்திருக்கிறார்கள் என்று மோப்பம் பிடித்துக் கண்டறிய முயல்வதற்கு, நாங்கள் மிகப் பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் செல்கிறோம். கடைசியாக ஜெர்மானியர்களிடம் போய் அவர் கண்டு வந்த விவரங்களைக் கூறுமாறு நான் அவரிடம் கேட்டுக் கொண்டேன்.

    • தோழர் எழுத்தாளரே, அதில் சொல்வதற்குச் சுவையான

விஷயம் எதுவும் இல்லை" என்றார் அவர்: நேற்றைக்கு முந்திய நாள் எங்கள் படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எல்லோருமே சென்றோம், நாங்கள் சில ஜெர்மன் பதுங்கு குழிகளுக்கு மேலாக ஊர்ந்து சென்றோம்; ஒரு ஜெர்மானியனை அவன் கூச்சல் போட்டு மற்றவர்களை உஷார்ப்படுத்தி விடாத படி, அவனை அரவமின்றிக் கத்தியால் குத்திக் கொன்றோம். அதன்பின் நெடுநேரம் வரையிலும் காட்டு வழியாக நடந்து சென்றோம். எங்களுக்கு இடப்பட்டிருந்த உத்தரவு, ஜெர்மானி யர்கள் அப்போதுதான் கட்டி முடித்திருந்த ஒரு பாலத்தை வெடி வைத்துத் தகர்க்க வேண்டும் என்பதே. அது எதிரியின் பிரதேசத்துக்குள் சுமார் நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. மேலும், நாங்கள் கண்டறிந்து கொள்ள வேண்டிய வேறு சில விஷயங்களும் இருந்தன. நாங்கள் அன்றிரவில் சுமார் பதினெட்டுக் கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து விட்டோம். பின்னர் எங்கள் படைப்பிரிவின் தளபதி ஒரு செய்தியை அனுப்புவதற்காக என்னைத் திருப்பியனுப்பி விட்டார், நான் ஒரு குறுகிய பாதை வழியாகச் சென்று கொண்டிருந்தேன், திடீரென்று ஒரு குதிரையின் புதிதாகப் பதிந்திருந்த கால் குளம்புத் தடங்களை நான் கண்டேன். நான் அதனைக் கூர்ந்து பார்த்ததில், அது ஜெர்மன் குதிரை லாடங்களின் தடமேயன்றி, நமது குதிரை லாடங்களின் தடமல்ல என்பதைக் கண்டேன். அதனை அடுத்து மனிதர்களின் காலடித் தடங்களையும் கண்டேன்; அந்தக் குதிரைக்குப் பின்னால் நான்கு பேர் நடந்து சென்றிருக்க வேண்டும்; அவர்களில் ஒருவனுக்கு அவனது காலில் ஓர் ஊனம் இருக்க வேண்டும். அந்தக் காலடித் தடங்கள் சற்று நேரத்துக்கு முன் பதிந்தவைதான். நான் அந்த ஜெர்மானியர்களை எட்டிப் பிடித்து விட்டேன்; அவர்களை நெடு நேரமாகப் பின் தொடர்ந்து சென்றேன்; பின்னர் அவர்களை விட்டுவிட்டு ஒரு சுற்று வழியாகச் சென்று, எனது சொந்த வழிக்கு வந்து விட்டேன். நான் அவர்கள் அனைவரையும் சுலபமாகச் சுட்டுத் தள்ளியிருக்க

முடியும். ஆனால் ஒரு சண்டையில் ஈடுபடுவதற்கு எனக்கு உரிமை

90