16
இதய
சூழ்ந்து நின்ற மந்திரிகளும் சேனாதிபதிகளும் அவன் பிரிவை எண்ணி அளவில்லாத துக்க மேலீட்டால் கண்களில் நீர் பெருக நின்றனர். அதைக் கண்ணுற்ற மார்க்கன், “ஏன் அழுகின்றீர்கள்? சேனையைப் பற்றியே சிந்தியுங்கள். எனக்காக வருந்தாதீர். நீங்கள் பின்னால் வருவீர்கள், நான் முன்னால் போகிறேன். அவ்வளவு தானே, விடை தாருங்கள், போய்வருகிறேன்” என்று கூறினன். அவனுடைய தேகம் ரோமாபுரிக்குக் கொண்டு வரப்பட்டு, வெகுவிமரிசையாக அடக்கஞ் செய்யப்பட்டது. கொம்மோதன் அவனுடைய ஞாபகார்த்தமாக ரோமாபுரியில் ஒரு கோபுரம் கட்டி அதன் மீது அவன் சிலையை நிறுத்திவைத்தான். பிரஜைகள் அனைவரும் அவனைத் தங்கள் கிரகதேவதைகளில் ஒன்றாக மதித்து வீடுகளில் அவனுடைய விக்கிரக மொன்றை வைத்துப் பூசித்த வரலாயினர்.
மார்க்க ஒளரேலியனுடைய புகழைப் பாடாதார் இல்லை. ஒருவனை அவனோடு கூடவே இருந்தவர் புகழ்வதும், அவனுடைய பகைவர் புகழ்வதும் துர்லபம. ஆனால் இவனை உடன் வாழ்ந்தவர் பகைவர் உள்படச் சகலரும் புகழ்ந்தனர் என்றால் இவனுடைய மேன்மையை என்னென்று சொல்வது ! மேலும், உலகம் யாரையும் பரிபூரண புருஷன் என்று ஒப்புக்கொள்வதில்லை; ஒவ்வொருவன் மீதும் ஏதாவது ஒரு குற்றத்தை ஏற்றியே வைக்கிறது. அரசர்கள் ஜீவந்தர்களாக இருக்கும் வரையில் பிரஜைகள் அவர்களிடம் தேவபக்தி செலுத்துகிறார்கள். ஆனால், அவர்கள் இறந்தவுடன் அவர்களுடைய குற்றங்களைப் பற்றிக் கூசாமல் வாதிக்கிறார்கள். ஆயினும், உலகம் அன்று முதல் இன்று வரையில் மார்க்கனைக் கோதிலாப் பெருங் குணத்தானகவே மதித்து வருகிறது. மார்க்கனுடைய விக்கிரகம் இங்கிலாந்து முதலான தூர