பக்கம்:இதய உணர்ச்சி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

இதய

நீ செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் அஜாக்ரதை, அறிவு காட்டும் வழியில் வெறுப்பு, அடைந்ததில் அதிருப்தி, வஞ்சகம், சுயநலம் முதலியவற்றை அறவே அகற்றி, அவ்வக்காரியத்தை உன் வாழ்நாளில் கடைசிக் காரியமாகப் பாவித்துச் செய்தால் உனக்கு யாதொரு துன்பமும் வராது.

2

★ ★ ★

னிதனுக்கு நல்வாழ்வுக்கு வழி காட்டுவது எது? தத்துவ சாஸ்திரம் ஒன்று தான். தத்துவ சாஸ்திரம் என்பது மனச்சாட்சிக்கு மாறக நடவாமலும், இன்ப துன்பங்களால் இடருறாமாலும், செய்வதை லட்சியமின்றியோ அல்லது பொய்யாகவோ அல்லது வஞ்சகமாகவோ செய்யாமலும், பிறர் இன்னது செய்யவேண்டும் அல்லது செய்யக்கூடாது என்று விரும்பாமலும், வருவதெல்லாம் தான் வந்த இடத்திலிருந்தே வருவதாய் எண்ணியும், மரண்த்தைப் பயமேது மின்றிச் சந்தோஷத்துடனே ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதுமேயாகும்.

3

★ ★ ★

நாம் அறநெறிக்கு வருவதற்குக் காலம் தாழ்த்தல் ஆகாது. ஏனெனில், தினந்தோறும் நமக்கு மரணம் சமீபித்துக்கொண்டே வருகிறது. அம்மட்டோ? மரணம் வருமுன்னதாகவே, நன்மை இது, தீமை இது என்று அறியும் பகுத்தறிவை நாம் இழந்துவிடவும் கூடும்.

4

★ ★ ★

யற்கையில் உண்டாகும் பொருள்களிலிருந்து விளையும் மற்றப் பொருள்களும் மனத்திற்கு மகிழ்ச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/24&oldid=1105767" இலிருந்து மீள்விக்கப்பட்டது