இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
38
இதய
விட்டால் அவைகளை இழக்க நேரிடும் பொழுது மிகுந்த துயரம் அடைவாய்.
56
உன்னுள்ளேயே தனித்திரு. நீதியானதைச் செய்வதில் திருப்தியடைவதும் அதனால் மனச்சாந்தி பெறுவதும் ஆன்மாவின் இயற்கையாகும்.
57
உன் உள்ளே நோக்கி வருவாய். சகல நன்மைகளின் ஊற்றும் உன் உள்ளேயே இருக்கின்றது. அந்த ஊற்று தோண்டத் தோண்ட ஊறிப் பொங்கி வரும்.
58
ஒருவன் பரமஹம்சனா யிருப்பினும் அவனை மனிதர் அவ்வாறு மதியாதிருப்பது எப்பொழுதும் சாத்தியம் என்பதை உணர்வாய்.
59
இன்ப வாழ்விற்கு அவசியமான பொருள்கள் மிக மிகச் சொற்பமே.
60
ஒவ்வொரு நாளும், “இது என் இறுதி நாளாகப் போய்விடலாம்” என நினைத்தே அதற்கேற்ப நடந்து கொண்டு, பரபரப்பும், சோம்பலும், வஞ்சகமும் இல்லாமல் ஒழுகுபவன் தான் ஒழுக்கம் பூரணமாய் நிறைந்தவன்.
61