பக்கம்:இதய உணர்ச்சி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

இதய

ஒரு பாகமான மனிதன் அதனை விட்டு விலகிவிட்டாலும் மறுபடியும் அதனுடன் சேர்ந்து ஒன்றாவதற்குரிய சக்தி அவனுக்கு உண்டு. இவ்விதம் பிரிந்து பின் சேர்ந்து கொள்வதற்கான சக்தியைக் கடவுள் மனிதனுக்குத் தவிர வேறெதற்கும் தரவில்லை. ஜன சமூக வாழ்விலிருந்து பிரியாமலே இருப்பதற்கும், பிரிந்தால் பின் சேர்ந்துகொள்வதற்கும் ஜீவ சிருஷ்டியில் வேறெதற்கும் தராத சக்தியை மனிதனுக்கு மட்டுமே தந்தருளும் கடவுளது கருணையின் திறம் என்னே ! 71

னிதனுடைய சுபாவத்தில் நியாயத்திற்க்கு விரோதமாக ஒரு நற்குணம் இருப்பதாக நான் மதிப்பதில்லை. ஆனால் போக விருப்பத்திற்கு விரோதமான குணமொன்று எனக்குத் தெரியும், அதுதான் இந்திரிய நிக்கிரகம் என்பது. 72

நீ என்னை எங்கேதான் கொண்டுபோய் விட்டாலும் சரி. என் அறிவு மட்டும் தன் இயற்கையின்படி உணரவும் நடக்கவும் கூடுமாயின், அங்கே நான் திருப்தியோடு, அதனால் ஏற்படும் மன அமைதியோடு வாழ்வேன், என் ஆன்மா சோர்ந்தும் பயந்தும் துயருழந்தும் இருப்பதற்கு இடமாற்றம் காரணமாகலாமோ ? 73

னித இயற்கைக்கு ஒத்ததே மனிதனுக்கு நிகழும், மாட்டின் இயற்கைக்கு ஒத்ததே மாட்டுக்கு நிகழும், திராட்சையின் இயற்கைக்கு ஒத்ததே திராட்சைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/44&oldid=1155986" இலிருந்து மீள்விக்கப்பட்டது