உணர்ச்சி
53
நிகழுமாயின் சேர்வது கஷ்டமான காரியமாய்விடும். மேலும், பிரியாதிருக்கும் கிளைக்கும் பிரிந்து சேர்ந்த கிளைக்கும் குணத்தில் வித்தியாசமுண்டு. மரத்தோடு ஒன்றுசேரினும் மன ஒற்றுமை இல்லை.
100
நீதி அல்லது நடுநிலைமையே சகல நற்குணங்களுக்கும் அஸ்திவாரம். நமக்குச் சஞ்சல புத்தியும், ஜாக்ரவதைக் குறைவும், இதர விஷயங்களில் இச்சையும் எளிதில் ஏமாறுந் தன்மையும் இருப்பின் நாம் எங்கனம் நீதியாய் நடக்க இயலும் ?
101
ஒருவன் என்னை இகழ்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அதற்காக விசாரப்பட வேண்டியவன் அவனேயொழிய நானில்லை. என்னுடைய விசாரம் அனைத்தும், இகழத்தக்கது எதுவும் நான் சொல்லாமலும் செய்யாமலும் இருக்கவேண்டுமே என்று கண்ணுங் கருத்துமாய் இருக்கவேண்டுவ தொன்றுதான்.
ஒருவன் என்னைப் பகைக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அதற்காக விசாரப்பட வேண்டியவன் அவனேயன்றி நானில்லை. நான் மாத்திரம் ஒவ்வொரு மனிதனிடமும் அன்புடனும் அறத்துடனுமே நடந்து கொள்வேன். பகைத்தவனுக்குங்கூட அவன் தவறை எடுத்துக்காட்டத் தயாராயிருப்பேன். அப்படி எடுத்துக் காட்டுவதையும் பழிக்காமலும், நான் பொறுமையுடையவன் என்று பெருமை காட்டாமலும், கண்ணியமாயும் பெருந்தன்மையாயுமே செய்வேன்.
102