உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதய உணர்ச்சி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

இதய



"நான் உனக்கு வஞ்சகம் செய்யேன்” என்று கூறுபவன் எவ்வளவு கபடஸ்தன்! சொல்வது உண்மையானால் செயலில் விளங்கிவிடுமே. மொழிவது முகத்தில் விளங்கவேண்டும். காதலரின் மனத்தினில் தோன்றும் காதல் அவர்கள் கண்களில் தானாகவே தெரிந்து விடுவது போல, ஒரு மனிதனுடைய தன்மையும் அவனுடைய கண்களில் உடனே தோன்றிவிடும்.

103

★ ★ ★

ருவன் உனக்குத் தீங்கிழைத்தால் இவ்விதம் நினைத்துக்கொள் : நானும் எத்தனையோ தவறுகள் செய்கிறேன். மற்றவர்களைப்போல் நானும் ஒரு

மனிதன். சில தவறுகளைச் செய்யாவிடினும் அவைகளைச் செய்வதற்குரிய அவா இருக்கவே செய்கின்றது. அவைகளைச் செய்யாதிருப்பதற்கும் கோழைத்தனமோ, உலகத்தாரின் மதிப்பை இழக்கக்கூடாது என்ற எண்ணமோ அல்லது இவைபோன்ற இழிந்த நோக்கங்களோ இவைதாம் காரணங்களாகும்.

104

★ ★ ★

ண்மையாகவே உனக்கு நல்ல சிந்தை இருக்குமாயின் உன்னை ஒருவரும் வெல்லமுடியாது. உனக்கு ஒருவன் தீமை செய்ய முயலும் சமயத்திலே நீ அவனிடம் அன்புகூர்ந்து, “குழந்தாய், அவ்விதம் செய்யாதே. நாம் வேறொன்றிற்காகச் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம். உன்னால் எனக்குத் தீங்கு நிகழாது என்பது நிச்சயம். ஆனால் குழந்தாய், இச்செய்கையால் நீ உனக்கே தீங்கு விளைத்துக்கொள்கிறாய் !” என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/56&oldid=1106005" இலிருந்து மீள்விக்கப்பட்டது