உணர்ச்சி
56
பட்சமாய்ப் புத்திகூறி அவன் தவறைத் திருத்துவாயானால் எவ்வளவு கெட்ட மனிதனும் உனக்குப் பணிந்து விடுவான். ஆனால் இப்படிச் செய்வதை வஞ்சகமாகவோ அல்லது நிந்தனையாகவோ அல்லது பிறர் மெச்சுவதற்காகவோ இல்லாமல், அன்புடனும் மனத்தில் துவேஷ மில்லாமலும் செய்யவேண்டும்.
105
கோபமுண்டாகும் பொழுது அதற்கு இடங்கொடுத்து விடுவது ஆண்மையன்று என்பதையும், அன்பும் சாந்தமுமே ஆண்மைக் குணங்கள் என்பதையும் ஞாபகப் படுத்திக்கொள். இவ்விரண்டு குணங்களையும் உடையவனே பலமும் மனோதைரியமும் உடையவன். காமக் குரோதத்துக்கும் அதிருப்திக்கும் ஆளானவனிடம் பலமும் மனோதைரியமும் இரா. காமக் குரோதாதிகள் அற்ற தன்மையின் அளவேதான் மனிதனக்குப் பலமுண்டு. ஆற்றாமை மாத்திரமேவீனத்துக்கு லட்சணம் என்று சொல்லுவது தவறு. கோபமும் பலவீனத்துக்கு லட்சணமாகும். ஏனெனில் துன்பத்துக்கு இடங்கொடுப்பவன், கோபத்துக்கு இடங்கொடுப்பவன் இருவரும் நோவடைகின்றனர், இருவரும் அடிமைப்பட்டுவிடுகின்றனர்.
106
ஒருவன் தன்னிடத்தில் பயனில்லாத எண்ணங்கள், சமூக ஒற்றுமையை உடைக்கும் செயல்கள், மனம் வேறு சொல் வேறாயிருத்தல், எதற்காக வேனும் தன்னைக் கடிந்துகொள்ள வேண்டியிருத்தல் ஆகிய இந்நான்கும் நிகழாவண்ணம் ஜாக்கிரதையாய்ப் பார்த்துக்