56
இதய
கொள்ள வேண்டும். அவை நிகழுமாயின் அவைகளை உடனே அகற்றிவிட வேண்டும். மனத்தில் இல்லாததை மொழிவது நியாய விரோதமானது. எதற்கேனும் உன்னே நீயே கடிந்துகொள்ளவேண்டி வந்தால் உன் தெய்வாம்சமானது அழியுந் தன்மையுள்ள உன் ஆக்ஞைக்கும் அதன் சுகானுபவங்களுக்கும் அடிமைப்பட்டுப் போயிற்று என்று ஏற்படும்.
107
முற்காலத்தில் அறநெறி வழுவாது நின்று வந்தவர்களில் யாரேனும் ஒருவரைப்பற்றி இடைவிடாது சிந்தித்துக்கொண்டிரு.
108
கழிந்த காலத்தைக் கருத்திற் கொள்ளாது, இனி மேல் நிகழப்போவதற்கு இறைவனை நம்பி, நிகழும் இந்நாளை நீதியிலும் பக்தியிலும் கழிப்பாயாக.
109
ஒவ்வொரு மனிதனும் பிறரைவிடத் தன்னேயே அதிகமாக நேசித்தாலும், தன் அபிப்பிராயத்தை மாத்திரம் பிறர் அபிப்பிராயத்தைவிடக் குறைவாகவே ஏன் மதிக்கிறான் என்று எனக்கு விளங்கவில்லை. யாரேனும் ஒரு குரு வந்து ஒருவனே, “அப்பா, தோன்றிய மாத்திரத்திலேயே வெளியே சொல்ல விரும்பமுடியாத எண்ணம் எதையும் மனத்தினுள்ளே எண்ணுதே ’’ என்று பணித்தால் அதை அவன் ஒரு நாளைக்குக்கூடக் தாங்கான். தன் மதிப்பை விட பிறருடைய மதிப்பை நாம் அம்மட்டுக்கு விரும்புகிறோம்.
110