பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

சமுதாய விடுதலைப் போரில் திராவிடர் இயக்க இதழ்கள்


 விகடன்’ பத்திரிகைக்கும், அண்ணல் கதர் பிரசார வணிக விற்பனைக்கும் குடியரசு இதழில்தான் அடிக்கடி விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கும்.

காங்கிரஸ் தேசியத்தை விட்டு பெரியார் வெளியேறினார். சுயமரியாதை இயக்கம் கண்டார். அதற்காக அவர் அரும்பாடு பட்டதோடு இராமல், குடியரசு பத்திரிகையைச் சுயமரியாதை இயக்கத்திற்கான கொள்கை விளக்க ஏடாக மாற்றினார். பத்திரிகை அந்த நேரத்தில் மிகப் பரபரப்புடன் விற்பனையானது.

வட நாட்டுக் காங்கிரஸ் தேசிய இயக்கத்தின் திறமைமிக்க தலைவர்களுள் மூவரை லால், பால், தாஸ் என்பார்கள் காங்கிரஸ் தலைவர்கள். அந்த மூவர் யார்? லாலா லஜபத்ராய், பால கங்காதர திலகர், சித்தரஞ்சன்தாஸ் என்பவரே அந்த மும்மணிகள். அந்த மூவரும் எழுத்து, பேச்சு, ஆக்கப் பணிகள் ஆகிய மூன்றிலும் நிகரற்றவர்களாக விளங்கியவர்கள். அதனால் அவர்களை அன்பாக, அருமையாக லால், பால், தாஸ் என்பார்கள்.

தமிழ் நாட்டுக் காங்கிரஸ் இயக்கத்திலும் குறிப்பாக பத்திரிகை உலகில் சுற்றி மூவரை மும்மூர்த்திகள் என்று அழைப்பார்கள் காங்கிரஸ் தொண்டார்கள். அந்த மூவர் யார்?

ஒருவர் முதலியார்; மற்றவர் நாயுடு; அடுத்தவர் நாய்க்கர். அதாவது ‘தேச பக்தன்’ ஆசிரியரான திரு.வி.க. முதலியார்; ‘தமிழ்நாடு’ நாளிதழின் ஆசிரியர் டாக்டர் வரதராசலு நாயுடு; ‘குடியரசு’ பத்திரிகை ஆசிரியர் ஈ.வெ.ராம்சாமி நாய்க்கர் என்பவர்களே அந்தப் பத்திரிகை உலகின் மும்மூர்த்திகளாக விளங்கினார்கள் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

‘குடியரசு’ இதழ் சுயமரியாதைப் பிரசார பீரங்கியானவுடன், பிராமணர் அல்லாதவர்க்குப் பாடுபடும் பத்திரிகையாக மாறியது. பெரியாரின் குடியரசு இதழ், திராவிட இயக்கப் பத்திரிகைகளுக்குத் தாயாகவும் திகழ்ந்தது.

‘விடுதலை’, ‘திராவிட நாடு’

காஞ்சி ஆசிரியர் அண்ணா

அறிஞர் அண்ணா பி.ஏ.(ஆனர்ஸ்) தேர்வுகளை எழுதி முடித்த பின்பு, 1936-ல் பெரியாரை அண்ணா திருப்பூர்