பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

13


the word strictly means a daily paper. But, the extension of the term to weekly and other periodicals is sanctioned by custom.”

‘டையர்னல்’ என்ற பண்டைய இலத்தீன் மொழிச் சொல், “செய்தித்தாள் என்ற பெயரின் செயல்முறைச் சார்பு கட்கும், ஜர்னல் என்ற அந்தச் சொல், நாளேடுகளைக் குறிக்கும் சொல் என்றும், ஆனால்; தன் பருவப்பொழுதைச் சற்று விரிவுப்படுத்தும்போது வாரப் பத்திரிகைகளுக்கும் மற்றும் பருவ வகை பத்திரிக்கைளுக்குமுரிய மரபு ஆகவும் அனுமதிக்கப் பட்டிருக்கிறது” என்பதைப் ப்ரெவர்ஸ் என்ற ஆங்கில அகராதி; ஜெர்னல் என்றால் பத்திரிகை வகை மரபுக்குரிய ஒரு பெயர் என்பதைத் திட்டவட்டமாக விளக்கிக் கூறியுள்ளது.

“Journal a daily record, as of occurences, experiences, or observations.

A Register of the daily transactions or observations or a public; or legislative body”.

“The serials devoted to learned socialies and professions, A News paper, Magazine, or the like, Book keeping, a day book in double entry journalism. One engaged in Journalism, used more widdly in England, than united states.

- [The Modern Library Dictionary of English Language.]

ஒரு Journal, அதாவது ஒரு பத்திரிகையின் இலக்கணத்தை, அதன் கடமையைக் கூற வந்த இங்கிலாந்து நாட்டுப் பல்கலைக் கழகத்தின் “மார்டன் டிக்‌ஷனரி”:

“ஜர்னல்” என்றால் ஒரு நாட்குறிப்பு, ஆவணம், தினந்தோறும் உலகில் நடைபெறும் சம்பவங்களின் குறிப்பு, தொழில் கணக்கு முறையில் நடைபெறும் அன்றாட அனுபவங்கள், அந்தந்த நிகழ்ச்சிகளின் அல்லது சம்பவக் காட்சிகளின் கூர்நோக்கு அறிவு, தினசரி தொழில் நடைமுறைகள், உலக நாடுகளில் நடைபெறும் வணிக நடவடிக்கைகள், சமுதாயத்தில் பாதிக்கப்படும் சட்ட உரிமை பாதிப்புகள், பொது மக்களிடம் நாள்தோறும் நடைபெறும் காட்சிகளின் நுட்பங்களை உற்று நோக்கும் அறிவுத் திறன் அல்லது சட்டமன்றச் சம்பவங்களின்