பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

15


‘தாளிகை’ என்று குறிப்பிட்டார்கள். மேற்கண்ட சொற்களில் ‘தாளிகை’ என்ற சொல்லைவிட ‘பத்திரிகை’, செய்தித் தாள் என்ற பெயர்களே மக்கள் மன வானில் விண்மீன்களாக ஒளிர்ந்தாடிக் கொண்டிருக்கின்றன.

“மேகசின்” என்ற
பெயர்க் காரணம்

பத்திரிகையை ஜெர்னல் என்றும், ஜெர்னலைப் பத்திரிகை என்றும் அகராதிகள் ஏன் குறிப்பிட்டன என்ற காரணத்தை, விளக்கத்தை இது வரைப் பார்த்தோம்.

அதே பத்திரிக்கைக்கு ‘மேகசின்’ (Magazine) என்ற பெயர் உருவானது ஏன்? மேகசின் என்ற இங்லீஷ் சொல்லுக்குப் படைக்கலப் பாசறை, போர்க் காலத்தில் படைக்குரிய ஆயுத தளவாடங்களையும், கருவிகளையும் சேர்த்துப் பாதுகாப்பாக வைத்திருக்கும் இடமாகும். துப்பாக்கிகள், அதற்குரிய வெடி மருந்துகளைக் குவித்து வைத்திருக்கும் இடம் என்பவை பொருள்.

அதனைப் போலவே, பத்திரிகை வகைகளில் ஒன்றான, பருவ இதழ்ச் சுவடிகளில் பல அறிஞர்களின், எழுத்தாளர்களின் அரிய பல கட்டுரைகள், அடங்கி - அடக்கி அல்லது குவிக்கப் பட்டிருக்கும்.

அத்தகைய எழுத்துப் புதையல்களை, அந்தப் பருவ இதழ்கள் போர்ப் பாசறை ஆயுத தளவாடங்களைப் போல பெற்றிருப்பதால், அந்த வெளியீடுகள் மக்களது அறியாமைப் பகைகளை, விரோதிகளை விரட்டியடிக்கும் பண்பு பெற்ற பத்திரிகைகள் பருவ வெளியீடுகள் என்பதால்; அவற்றை இங்லீஷ் மொழியில் Magazine என்று குறிப்பிட்டார்கள்” என்று தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களுள் ஒன்றான சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள “ஆங்கிலம் - தமிழ் சொற் களஞ்சியம்” கூறுகின்றது.

Magazine என்ற சொல்லுள் உள்ள முதல் நான்கு எழுத்தான Mega ‘மெக’,என்பதிலே உள்ள Aவுக்குப் பதிலாக E, என்ற எழுத்துச் சேர்வதால்; அதே ஓசையுள்ள Mage என்ற