பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

சமுதாய விடுதலைப் போரில் திராவிடர் இயக்க இதழ்கள்


 உழைத்தவர். திருநெல்வேலி நகரிலிருந்து அவர் ‘கழகக் குரல்’ என்ற வார இதழை நடத்தி வந்தார். பிறகு சென்னைக்கு வந்து குடியேறிய திருவை. அண்ணாமலை, கழகக் குரல் பத்திரிகையைச் சில மாதங்கள் நாளேடாகவும் நடத்தினார்.

‘தென்னகத் தலைவன்’

கே.ஏ. மதியழகன்

திராவிட முன்னேற்றக் கழக ஐம்பெருந் தலைவர்களிலே ஒருவராக விளங்கிய கணியூர். சோமசுந்தரம் எனப்படும் கே.ஏ. மதியழகன், ‘தென்னகத் தலைவன்’ என்ற நாளேட்டை நடத்தினார். அவருக்குப் பிறகு அந்த தினப்பத்திரிகையை அவரது உடன்பிறந்த தம்பி கே.ஏ. கிருஷ்ணசாமி நடத்தினார்.

கே.ஏ. மதியழகன் கல்லூரிக் காலம் முதல் திராவிடரியக்கக் கொள்கை வீரர். அறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பிகளில் குறிப்பிடத்தக்க பேச்சாளரும் எழுத்தாளருமாவார். கே.ஏ. மதியழகன் 1967-ஆம் ஆண்டில் அறிஞர் அண்ணா அமைச்சரவையில் உணவுத் துறை அமைச்சராக இருந்தார். தமிழ்நாடு சட்டப் பேரவை சபாநாயகராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

‘கயல் தினகரன்’

தென்னகத் தலைவன்

கயல் தினகரன் என்ற அருமையான எழுத்தாளர் ‘தென்னகத் தலைவன் என்ற பெயரில் அறிஞர் அண்ணா மீதிருந்த ஆர்வக் கொள்கைப் பற்றால், வார இதழாக நடத்தி வந்தார். அந்தப் பத்திரிகையை, கே.ஏ. மதியழகன் கயல் தினகரனிடமிருந்து உரிமை பெற்று, வார ஏடாக, நாளேடாக நடத்தினார்.

‘கவிக்கொண்டல்’

செங்குட்டுவன்

அறிஞர் அண்ணா அவர்களை ஆசிரியராக ஏற்று, தி.மு.கழகத்தின் சார்பாக ‘நம்நாடு’ நாளேடாக சென்னையிலிருந்து வெளி வந்தது. அந்தப் பத்திரிகையில்