பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

175


பத்துவகையில் திறம்படப் புரிபவர்; சோடசாவதானி என்றால் பதினாறு வகையிலும், சதாவதானி என்றால், நூறு வகைச் சிந்தனைகளோடும், எடுத்த ஒரு காரியத்தைச் செய்து வெற்றி பெறுபவர் ஆவார் என்பது பொருள்.

மேற்கண்ட அவதானங்களை வெற்றிகரமாக ஆற்றிக் கவி காளமேகம் செய்து காட்டினார்; செய்குத் தம்பி பாவலர் தசாவதானியாகவும், சதாவதானியாகவும் விளங்கியப் புகழ் பெற்றார். அட்டாவதானி புரசை சபாபதி முதலியார், சித்தாந்த சரபம், அட்டாவதானி பூவை. கலியாண சுந்தர யதீந்திரர் மற்றும் சிலர் அவதானக் கலையில் கீர்த்திப் பெற்றவர்கள் ஆவர்.

ஏன் இதை இங்கே சுட்டினோம் என்றால், அவதாரம் என்பது வேறு, அவதானி என்பது வேறு. அவதாரம் என்றால் விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்து ஆன்மீகத் திருவிளையாடல்களை ஆற்றி, தெய்வீகச் சக்திக்குப் புகழூட்டுவது. அது சுலபம் அவர்களுக்கு. காரணம், அவர்கள் மனித சக்தியை மீறியவர்கள். தங்களைச் சுரர்களாக்கி அறிமுகப்படுத்திக் கொண்டவர்களாதலால் எதையும், எண்ணியபடி செய்து கொள்வார்கள். ஆனால், அவதானிகள் அத்தகையவரல்லர்.

அவதானிகள் மக்களிலே ஒருவராகப் பிறந்து, வாழ்ந்து இறப்பவர்கள். அவ்வாறானால் அம்படிப்பட்டு மாண்ட இராமர், ஆற்றுக்குள் மூழ்கி இறந்த கிருஷ்ணன் ஆகியோரும் மனிதர்களாகப் பிறந்தவர்கள் தானே என்று கேட்டு விடாதீர்கள்! ஆன்மீகம் என்றால் யாரும் கேள்விக் கேட்கக் கூடாது! அது மதம்; தெய்வீகம் சம்பந்தப்பட்ட சம்பவங்கள்.

அவதானி என்பவர், தனது அறிவால், சிந்தனையால் திறமையை வெளிப்படுத்தும் ஓர் அறிவுக் கலைஞர். அவதானம் கற்றால்தான் திரும்ப அதை ஆற்ற முடியும். உரிய பயிற்சிகளைக் கடுமையாகப் பெற வேண்டிய கலை. இங்கே ‘வைகோ’வும், திருநாவுக்கரசும் அவர்கள் நடத்தும் ‘சங்கொலி’யும் அவதானக் கலை ஆசான்களாக விளங்கி வருகின்றனர்.

24 பக்கங்கள் கொண்ட ஒரு வார இதழ், அந்த வாரத்தில், அட்டவதானியாக, தசாவதானியாக, சோடசாவதானியாக அவதானக் கலையை - அரசியல், சமுதாயம், இனம், மொழி, போன்ற ஆய்வுத் துறைகளில் செய்து, அவை கட்டுரை