பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

சமுதாய விடுதலைப் போரில் திராவிடர் இயக்க இதழ்கள்


வடிவில் தேர்வு செய்து வெளி வருவதைப் பார்க்கின்றோம். அத்தனை திருப்புமுனைக் கருத்துக்களை ஒரு வார இதழ் வாரந்தோறும் அதனது வாசகர்களுக்குக் கற்பிக்கும் ஆசானாக, ‘சங்கொலி’ இசைபாடி உலா வருகின்றது. எடுத்துக்காட்டாக, மாதம் தோறும் ‘நமது நினைவில்’ நிற்க வேண்டிய திங்கள் வரலாற்றுக் குறிப்புகள்’ என்ற வரலாற்று ஆய்வுக் கலை அவதானத்தில்; 1886-ஆம் ஆண்டில் விடுதலை இயக்க வீரர் எஸ்.எஸ். விசுவநாததாசு பிறப்புத் தினத்தைக் குறிப்பிட்டுக் காட்டி, அவரது வரலாற்றை நமக்கு நினைவுப்படுத்தும் தேசிய அவதாரமாக, அன்றைய; விசுவநாத தாசின் தேசபக்த உணர்வுகள் அவதானமாக உள்ளது அல்லவா?

அவ்வாறானால் ‘சங்கொலி’ பத்திரிகையும், அதன் ஆசிரியரான ‘வைகோவும்’, பொறுப்பாசிரியராகப் பணியாற்றும் க. திருநாவுக்கரசுவும் தமிழ்நாட்டின் பத்திரிகை உலக அவதானக் கலைஞர்கள்தானே!

எனவே ‘சங்கொலி’ என்பது அரசியல் உலகில் பணம் திரட்டும் ஒரு விளையாட்டு இதழன்று. ஏனெனில், திருமணமானதும் முதல் பிரவசத்தின்போது குறிப்பிடப்படும் பிரசவ நேர உபாதைகளைப் போன்ற நிகழ்ச்சிகள் கொண்ட முதல் பிரசவ சாதனைகளாகும்! இத்தகைய ஒரு வலி தரும் பத்திரிகையைத் தினந்தோறும் நடத்தியவனுக்குத்தான் அந்த பத்திரிகையின் வாரப் பிரதிவார பிறப்பின் அருமைகளைப் பெருமையாக நினைக்கும் மகிழ்ச்சியே முகிழ்க்கும்! அந்தத் தோற்றப் பெருமைகளைச் ‘சங்கொலி’க் கொள்கை நாதங்களென எழுப்பி - நமக்கெலாம் உவகை மழலை ஒலிகளை வழங்கி வருகின்றது. வாழ்க ‘சங்கொலி’ முழக்கங்கள்.

‘அண்ணா’

நாளேடு

மக்கள் திலகம், நடிகர் எம்.ஜி.இராமச்சந்திரன் தனது அரசியல் கொள்கைப் பிரச்சாரத்துக்காக அறிஞர் அண்ணா அவர்களது பெயரால் நாளேடாக நடத்தும் நிறுவனராக விளங்கினார். அந்த ஏடும் திராவிடரியக்க அவரது அரசியல் வளர்ச்சிக்காக நடத்தப்பட்ட உணர்ச்சிப் பத்திரிகையாக நடந்தது.