பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

சமுதாய விடுதலைப் போரில் திராவிடர் இயக்க இதழ்கள்


நாயகனான சேர மன்னன் என்ற வஞ்சி நாட்டான் கோபமாகக் கூறும் வசனம் ஒன்றை எழுதினார். ‘வஞ்சியான் எவரையும் வஞ்சியான்’ என்பதே அந்த வசனம்.

திரை உலகில் சிவாஜி கணேசன் புகுவதற்கு முன்பு சிவாஜி கணேசனாக அனல் பறக்கும் வசனங்களைப் பொறி பறக்கப் பேசியவர் நடிகர் பி.யு. சின்னப்பா. அவர், ‘வஞ்சியான் எவரையும் வஞ்சியான்’ என்ற வசனத்தைக் கனல் தெறிக்க பேசும்போது அரியணை அதிருமாறு சினச் சீற்றத்துடன் பேசி, அந்த வசனத்தை ஓர் எரிமலை ஆக்குவார்.

பேராசிரியர் சுந்தரம் பிள்ளை எழுதிய அந்த வசனத்தின் பண்புக்கேற்ப, நாகர்கோயில் நகரிலே பிறந்த நாஞ்சில் நாட்டவரான நாஞ்சில் நீ. மணிமாறன் என்ற சிறு வள்ளலான அவர், எவரையும் - எந்தநேரத்திலும், எந்தத் துறையிலும் வஞ்சியாதவர் மட்டுமன்று. வாரி வழங்கிய பறம்பு நாட்டரசரான பாரி வள்ளல் வாரிசைப் போல - வறுமையாளர்களை இன்முகம் காட்டி வரவேற்கும் திராவிடரியக்க வள்ளல் நாஞ்சில் மணிமாறன் ஆவார்.

இளம் வயது முதலே கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் பிறந்த நாகர்கோயில் மண்ணிலே பிறந்துவிட்டக் காரணத்தால், பிறந்ததற்காக வாழ்கின்ற வறுமைப் பிஞ்சுகளுக்கு சிவகெங்கை மன்னர் பாஸ்கர சேதுபதி, உலகம் போற்றும் விவேகானந்தர் அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகருக்குச் சென்று ஆன்மிக ஞான உரை ஆற்றி வேதாந்த கேசரி என்ற விருதைப் பெற்றிட வாரி வழங்கி வழி அனுப்பி வைத்ததைப் போல - நாஞ்சில் நீ. மணிமாறன் என்ற மனிதரும் புலவர்களுக்கு அள்ளியள்ளிக் கொடுத்துப் போற்றும் பண்பாளராக வாழ்பவராவார்.

அந்த மணிமாறன் அவர்கள், ‘புதிய பூமி’ என்ற நாளேட்டைத் துவக்கி, திராவிடரியக்கக் கொள்கைகளை வளர்த்தார். அறிஞர் அண்ணா தலைமையை இளம் வயதிலேயே ஏற்ற அவர், சென்னை நகர் வந்து செம்மொழியாம் தமிழ்மொழிக்குப் ‘புதிய பூமி’ என்ற முத்தமிழ்க் கலைக் குழுவை உருவாக்கிக் கலை நிகழ்ச்சி நடத்தி இன்றும் முத்தமிழ்த்