பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

தற்கால - கட்சி சார்பற்ற தமிழ்ப் பத்திரிகைகள்


களுக்கும் ஓர் எச்சரிக்கை அறிவிப்பாக (Alert), எப்போதும் விழிப்போடு இருக்க வேண்டும் என்ற ஓர் அக்கறை ஒலியை அடித்துக் கொண்டே திங்கள் தோறும் வெளிவருகிறது.

விகடகவி என்றால் Humourous Verse அதாவது நகைச் சுவைப் பாடல் என்றும்: நகைப்பை நடமாட விடுபவர் Bufoon என்றும், Jester என்றும் கூறுவர்.

ஆனால், கற்றார்களுக்கு வேறுபாடகவும் Change, சிந்தனை இளைப்பால் களைப்புத் தேவைப்படுவோர்க்கு A Mas Querade Dance போன்ற ஒருவகை நாட்டிய நாடகத் தமிழ் இன்பமாகவும், எதிர்வாதமிடுவோர்க்கு Roughness போன்ற கரடு முரடான ரோஜா முள்ளாகவும், இலக்கணப் பகுதி போன்ற சில சிந்தனைகள் Comical லாகவும்; நடிகன் தனுஷ் போன்றவன்கட்கு What is hideous என்ற பயங்கர விமர்சனமாகவும், காரகம் போன்ற செய்திகள் வரலாற்று அழகுணர்வூட்டும் Beauty ஆகவும் ‘எது கட்சி? என்ன கொள்கை? யார் தலைவன்?’என்ற Bewilderment எனும் திணறலை, திகைப்பை மூட்டுவதாகவும்; இன்றைய சமுதாய அரசியல் ஒரு வகை Kind of Hell நரகமாகக் காட்சியளிப்பதை Haughty Person என்ற செருக்குப் பண்போடு விகடகவி பல்சுவை இதழ் Jester ஆக நடமாடுவது பத்திரிகை உலகுக்கு ஒரு புதுமை

பத்திரிகைக்கு ஆசிரியர் ஜே.பால், தலைமை நிர்வாக ஆசிரியர்கள் தோழியர்கள் பா.பிரேமலதா, ஜெ.நிரஞ்சின் ஆவர்! எந்த கட்சி ஏடு இது, என்று கணிக்க முடியாத உருவத்தோடு நடமாடுகிறது.

உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நாயகம் சார்லி சாப்ளின் திருஉருவை சின்னமாகப் பெற்றுள்ளதால், மக்கள் சிந்தனைக்கே அந்தப் பத்திரிகைக் கருத்துக்கள் அடையாளங்களாக அணி வகுக்கின்றன!

‘கழக முரசு முருகு’ இதழ்

பெயர்தான் கழக முரசு! ஆனால், அதன் தொண்டு சீரிய இலக்கிய ஆய்வுப் பணியாக, இலக்கிய அறிஞர்கள் இடையே