பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

229




10


பத்திரிகை வளர்ச்சிகளை அழிக்கும்
அடக்குமுறைச் சட்டங்கள்!


வாள்முனையின் வலிமையைவிட பேனா முனையின் சக்தி பலம் வாய்ந்தது’ என்றான். பிரெஞ்சு நாட்டின் எழுத்துலகச் சிற்பியான வால்டேர்! என்ன காரணம் அதற்கு?

ஒரு பேரரசை, ஏகாதிபத்திய ஆட்சியைப் பேனா முனையில் அழிக்கவும் முடியும்; ஆக்கவும் முடியும். எழுதுகோல் சிந்தனையால் கவிழ்க்கவும் இயலும்; காக்கவும் முடியும்’ என்றான் சமயப் பற்றற்ற அந்தச் சான்றோன்.

அதனால்தான் அரசியல் சட்டத்தை மக்களாட்சிக்காக வகுத்த வித்தகம், அரசியல் சட்டம், நாடாளுமன்றம்; நீதிமன்றம் என்ற முப்பெரும் சக்திக்கும் மேலாக - நான்காவதாகப் பத்திரிகைப் பலத்தை அரணாக அமைத்தது.

எனவே, ஓர் அரசு நிலையாகச் செயல்பட வேண்டுமானால் பத்திரிகைகள் அவற்றின் உரிமைகளோடு சுதந்திரமாகச் செயல்படவேண்டும் என்று எண்ணினர் அரசியல் மேதைகள்.

அவை அவ்வாறு செயல்படாமற்போனால், ஆட்சிக்கு அடிமைகளாக இயங்கினால், எந்த மக்களாட்சியாலும்