பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

பத்திரிகைகள் தோன்றும் முன்பு செய்திகள் எப்படிப் பரவின!


ஆன்மீகம், எல்லாமே இணைந்து, ஒருவகைச் சமுதாயச் சிந்தனையாக வெளிப்படுத்துதலே ‘பண்பாடு’ எனும் மூன்றாம் நிலை ஆகும்.

எனவே, முரசு கொட்டியும், ஆராய்ச்சி மணி அடித்தும், கொம்பூதியும், கல்வெட்டு, கற்சிற்பங்கள், கற்கோயில்கள், ஃபேபரஸ் நாணற் இலைகளில் எழுதப்பட்ட எழுத்துக்கள், மரப் பலகை எழுத்துக்கள், பட்டுத் துணிகளில் வரையப்பட்ட செய்திகள், அறிஞர்களது கூட்டத்துப் பேச்சுகள், திருக்கோவில் கதை உரையாடல்கள், திருவிழாக்கள் மூலமாகச் செய்திகளைப் பரப்புதல், அரண்மனை மடல் செய்திகள் போன்றவைகளால் செய்திகளைப் பரப்பும் முறைகளும் பழங்காலத்தில் இருந்தன.

ஓரிடத்தில் நடக்கும் நன்மை-தீமைச் செய்திகளைச் சுற்று வட்டாரத்து மக்களுக்கு அல்லது நாடு விட்டு நாடு தாண்டி அறிவிக்கும் பழக்கம் இன்று நேற்றல்ல வரலாறு தோன்றும் போதே உடன்பிறந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்துள்ளது.

இதற்குரிய எடுத்துக்காட்டுகளாக: கற்காலச் செய்திகளை ஆராய்ந்த இங்கிலாந்து அறிவியல் அறிஞர் சர் ஜான் லூ பெக் Sir John Lub Back, 1839ல்ஜ‌ேக்கன் பவுச் சர் டி ப‌ெர்த்ஸ் Jaques Boucher de Perths, சிக்கிமுக்கிக் கல்லில் நெருப்பைக் கண்ட அபிவில்லிப் Abbeville, என்ற ஃபிரான்ஸ் மேதை, 1929-ம் ஆண்டில் சீன நாட்டில் செள-னோவ்-டீன், Chow Knowtien 1911ல் இங்கிலாந்து நாட்டு சுசக்ஸ், ஃபிரான்சில் செல்லஸ், செயிண்ட் அச்சுல் Susses, St. Acheul, என்ற இடங்களின் தொல் பொருட் சின்னங்களை ஆய்வு செய்தோரின் செய்திகளைக் கூறலாம.

எரிமலை கக்கிய தீப்பிழம்புகளிலிருந்து தீ பற்றியதைப் பழங் கற்கால மனிதன் அறிந்து கொண்டான் என்று அறிவியல் மேதை டார்வின் Darwin கூறிய புதுமை கருத்து; அப்போதைய மக்களுக்குரிய அறிவியல் செய்தியாகப் பரவியது.

புதிய கற்கால மனிதன் இந்தியாவில் கோதாவரி ஆற்றுக்குத் தெற்கே, அதாவது வட கர்நாடகப் பகுதியிலும், தமிழ்நாட்டில் சேலம், தர்மபுரி, வட ஆற்காடு மாவட்டங்களில் வாழ்ந்ததற்கான கற்கருவிகள் கிடைத்துள்ளன. அவற்றுள்