பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

25


கோடாரி முக்கிய ஆய்வுப் பொருளான செய்தி வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய கற்காலத்திற்குப் பிறகு, கி.மு. 40-ம் ஆண்டில் உலோக காலம் தொடங்கி, செம்புக் காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம் வரை வாழ்ந்த மனித வாழ்க்கையில்; மாறுதல்கள் பல மாறிமாறி ஏற்பட்டதால், மக்கள் எழுதும் கலையிலும், ஓரளவு வளர்ச்சி அடைந்தார்கள். இக்கால மக்கள் எழுதும் எழுத்துக்குப் பட எழுத்து Hieroglyphics என்று சுமேரிய நாகரிகச் செய்தி கூறுகின்றது.

அகர முதலி வரிசைப்படி எழுதும் முறை; உலகத்தில் முதன்முதலாக கி.மு. 3000 ஆண்டில் எகிப்து நாட்டில் வளர்ச்சிப் பெற்றதாகவும், பழங்கால எழுத்து முறை ஆரம்பமான காலமே வரலாற்றின் துவக்கக் காலம் என்றும் எகிப்து நாகரிகச் செய்தி உலகுக்கு உணர்த்துகின்றது.

எகிப்து : வரலாற்றுத்
தந்தை ஹெரடோட்டஸ் :

பூமியில் தோன்றிய பழம் பெரும் நாகரிகங்களில் ஒன்று எகிப்திய நாகரிகம். இதைவிட மூத்த நாகரிகம் சுமேரிய நாகரிகம். மற்ற நாகரிகங்கள் எல்லாமே எகிப்து நாகரிகத்திற்குப் பிற்பட்ட நாகரிகமாகும். இதை நாம் கூறவில்லை. வரலாற்றின் தந்தை என்று உலகம் இன்றும் போற்றும் கிரேக்க வரலாற்றாசிரியரான ஹெரடோட்டஸ்; தனது ‘வரலாறு’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அவர்தான் முதன் முதலாக உலகம் சுற்றிச் சுற்றி வரலாறு எழுதிய முதல் சரித்திர ஆசிரியர். அவர் எகிப்தின் நைல் நதி வளத்தைக் கண்டப் பிறகு, ‘எகிப்து நைல் நதியின் நன்கொடை’ என்று கூறியவர் அவரே! இவை எல்லாம் உலகச் செய்திகளா? இல்லையா? சிந்திக்க வேண்டுகிறோம்.

நெப்போலியன் கல்வெட்டு

மாவீரன் நெப்போலியன் 1798-ஆம் ஆண்டில் எகிப்து மீது படையெடுத்தபோது, அவனுடன் பொறியாளர்கள்,