பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

264

பத்திரிகை நடத்துவது எப்படி?


பட்டமோ, ஆங்கிலர் ஆட்சி போல வேட்பாளர் வரி கட்டியிருக்க வேண்டும் என்ற விதிகளோ தற்போதைய மக்களாட்சியில் இல்லையல்லவா? அதனால்தான் இங்கே இந்த சம்பவத்தை நினைவு படுத்தினோம்! அவ்வளவுதான்!

நமது நாட்டில் பத்திரிகைகளை யார் வேண்டுமானாலும் நடத்தலாம். நடத்த விரும்புவோர்க்கு அரசு விதிமுறைகள் சில உள்ளன. அவற்றைப் புரிந்து கொண்டு, பின்பற்றினாலே யாரும் பத்திரிகையை நடத்தலாம்.

ஆரம்ப விதிமுறைகள் :

பத்திரிகை உலகில் புதிதாகப் புக விரும்பும் ஒருவர், முதலில் என்ன வகையான இதழ்களை நடத்தலாம்? நாளிதழா, வார இதழா? வாரம் இருமுறை இதழா? வாரம் மும்முறையா? மாதமா? மாதம் இருமுறையா? மும்மாதத்திற்கு ஓரிதழா? ஆண்டு மலரா? என்பதை முதலில் சிந்தித்துத் திட்டமிட வேண்டும். ஏனென்னறால், அதற்குரிய பண நிலை வசதிகளுக்கான திட்டம் தீட்டுவது நல்லதல்லவா?

முடிவெடுத்த பின்பு, என்ன நோக்கத்திற்காகப் பத்திரிகை நடத்தலாம் என்பதை எண்ண வேண்டும். இலக்கியத்துக்காக மட்டுமா? உவமைக் கவிஞர் சுரதாவைப் போல கவிதைத் துறை வளர்ச்சிக்கா? அரசியலுக்கா? பொருளாதாரப் போக்குக்கா? கல்வி வளர்ச்சிக்கா? சமுதாய மூன்னேற்றத்திற்கா? சமுதாய சீர்திருத்த மறுமலர்ச்சிக்கா? திரைத் துறை பொழுது போக்குக்கா? அறிவியல் துறையிலே பணியாற்றுபவர்களின் தொண்டு விமரிசனத்துக்கா? நகைச் சுவைக்காகவா? அரசியல் கட்சிக்காகவா? ஆட்சிக்கு ஆதரவாகவா? விஞ்ஞான; மருந்தியல் புதுமைகளை விளக்கவா? வரலாற்று விவரங்களை நினைவுப்படுத்தவா? தினந்தோறும் நடைபெறும் சமுதாய வம்படி, அதிரடிகளைச் சுட்டிக் காட்டிச் சட்டத்தின் சக்தியை உணர்த்தவா? நீதிமன்ற வழக்குகளின் வாதாட்ட அபூர்வ வரலாறுகளை எடுத்துக் காட்டவா? வணிக நிறுவனங்களுக்குள்