பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

278

ஒவ்வொரு பத்திரிகையும் ஆண்டறிக்கை அனுப்ப வேண்டும்!


மாவட்ட நீதிபதிகளிடம் பத்திரிகை வெளியிடுபவரும், அச்சகத்தாரும், அதற்குரிய விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அவர்களின் ஒப்புதலைப் பெற்றார்களோ, அதைப் போலவே பத்திரிகையை நிறுத்துவதென்றாலும் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து நிறுத்தி விட்டோம் என்பதையும் அவர்களிடம் தெரிவித்து ஒப்புதல் பெற்றாக வேண்டும். இல்லை என்றால் தண்டனைக்குரிய குற்றமாக அதை எண்ணி நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், இப்போது யாரும் இந்த விதியை ஏனோ பின்பற்றப்படுவதில்லை. காரணமும் புரியவில்லை.

பத்திரிகைகள் வெளியிடுபவர்கள் அதற்குரிய விதிகளை, ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி வெளியிடும்போது நாட்டில் நடைபெறும் பத்திரிகைகள் வெளியிடும் முறைகளும் நெறிப்படுத்தப்பட்டத் துறையாகத் திகழும் அல்லவா?