பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

27


மக்கட்தொகை கணக்கெடுப்போர், வருமான வரி கணக்கர்கள், வரலாறு திரட்டுவோர் என்ற பல வகையினர் இருந்திருக்கிறார்கள் என்றால், அந்தக் காலத்திலேயே எகிப்திய மொழியில் எழுத்தாளர்களும் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா?

எகிப்து நாட்டில் பெண் எழுத்தாளர்கள் அதிகமாக இருந்தார்கள். அவர்கள்தான் ஆண்களுக்கு காதல் கடிதங்கள் எழுதுவார்கள். ‘ஓ, எனது அருமைக் காதலரே! நான் உனது மனைவி யாவதற்கு ஆசைப்படுகிறேன்’ என்று எழுதுவார்களாம். இந்த பெண்கள் ஃபேப்பிரஸ் என்ற தாளில், புகைக் கரி, தாவரக் கோந்து கொண்டு எழுதுவார்கள் என்பதும் செய்திதாளே?

சிறுகதை எழுத்தாளர்கள், கவிதை எழுதுவோர், வீர சாகசக் கதை எழுதுவோர், பேய் கதைகள் எழுதுவோர், அற்புதச் செயல்களை எழுதுவோர், துப்பறியும் கதை எழுதுவோர், காதல் லீலை கதைகள் எழுதுவோர், நீதிநெறிகளை விளக்கும் உவமைக் கதைகள் எழுதுவோர் எகிப்து நாட்டில் இன்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கிறார்கள் என்றால். எழுத்தாளர்கள் பெருமை சொல்லப் போமோ!

ஹீப்ரு : தாவீது மன்னன்
சிறந்த எழுத்தாளர்!

பாலஸ்தீனத்தில் எகிப்தியர் ஆதிக்கம் வீழ்ச்சியுற்ற பின்பு, யூத இனத்தவர் கானான் தேசத்தில் குடியேறி, அவர்கள் பேசிய மொழிதான் ஹீப்ரு. அந்த ஹீப்ருக்கள் உருவாக்கியதே ஹீப்ரு நாகரிகம்.

இஸ்ரவேல் மன்னர்களில் ஒருவரான தாவீது அரசன் கி.மு. 1004-லிருந்து 965 வரை அரசராக இருந்தார். இவர் ஒரு சிறந்த எழுத்தாளர்.

கிறித்துவர்களின் பைபிள் என்ற நூலில் ‘சங்கீதம்: Psalms என்ற பகுதியை எழுதியவர். இதில் துன்பத்தையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் பாடல்கள் ஏராளமாக