பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

297


பத்திரிகைகள் விரும்பவில்லை. அதனால் அந்த நிறுவனத்தை விட்டு விலகினார். ‘பிரஸ் பீரோ’ (Press Bureau) என்ற அமைப்பை உருவாக்கினார்.

சென்னை, மும்பை, கொல்கொத்தா போன்ற பெரு நகரங்களில் ராய் பிரஸ் பீரோ கிளைகளைத் துவக்கினார். இந்திய இதழ்கள் ஒவ்வொன்றும் மாதந்தோறும் 350 ரூபாயைச் செய்திக் கட்டணமாகச் செலுத்தின.

திடீரென்று ராய்க்குப் பணத் தேவைகள் அதிகமாயின. அவரால் அந்த நிறுவனத்தை நடத்த முடியாததால், இந்தியாவிலே புதிய கிளைச் செய்தி நிறுவனத்தை அப்போது துவக்கி இருந்த இராய்ட்டர் செய்தி நிறுவனத்தோடு அதைச் சேர்த்து விட்டார்.

அதற்குப் பிறகு ராய் இந்தியன் நியூஸ் ஏஜென்சி (Indian News Agency) என்ற நிறுவனத்தைத் துவக்கி 1947-ஆம் ஆண்டு வரை நடத்தி வந்தார்.

அகில இந்தியத் தேசிய இயக்கம் பலம் பெற்று ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் பல போராட்டங்களை காந்தியடிகள் நடத்தி வந்த காலத்தில், சதானந்தர் என்பவர் ‘ஃபிரி பிரஸ் இந்தியா நியூஸ் ஏஜென்சி’(The Free Press of lndia News Agency) என்ற ஓர் உலகச் செய்தி நிறுவன அமைப்பை, மற்ற சில பத்திரிகையாளர்களோடு இணைந்து நடத்தினார். ஆங்கிலேயர் ஆட்சியின் கெடுபிடிகளால் அவருக்கு நிதி நெருக்கடி நிலை உண்டானது.

ஓர் இந்தியர் நடத்தும் செய்தி நிறுவனம் என்பதால், யார்யார் இந்திய நிறுவனத்திடம் செய்திகளைப் பெற்றுப் பத்திரிகைகளில் வெளியிட்டார்களோ, அந்தப் பத்திரிகையாளர்களைச் சட்டமெனும் இரும்புக் கரத்தால் அடக்கி ஆங்கிலேயர் ஆட்சி அபராதங்களை விதிக்கச் செய்தது.

இதனை எதிர்த்த இந்தியர் சதானந்தர், ‘ஃப்ரிபிரஸ் ஜெர்னல்’ (Free Press Journal) என்ற பத்திரிகையை துவக்கி நடத்தினார். இருந்தாலும், ஆட்சியின் முன்பு சங்கீதமா? என்ற கருத்தின்படி சதானந்தரால் சமாளிக்க முடியாமல் பத்திரிகையை நிறுத்தி விட்டார்.

‘ஃப்ரி பிரஸ் ஜெர்னலில் பணியாற்றிய பி. சென்குப்தா, (Sengupta) என்பவர், இந்திய யுனைடெட் பிரஸ் என்ற செய்தி நிறுவனத்தை உருவாக்கி, அதனின் நிர்வாக இயக்குநராகப்