பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

317


களோடுப் பேசுவார்கள். அதாவது, பேச்சு மேடையேறியதும் என்ன நோக்கத்தில் அவர்கள் பேசிட கருத்துக்களை ஏந்தி வந்தார்களோ, அந்த எண்ணங்களை, உரைகளைப் பேசுவார்கள். இதற்கு Extemmpore Utterances என்று பெயர்.

சில அரசியல்வாதிகள் பேச்சுகள் உணர்வூட்டிம் தீப்பொறிப் பேச்சுக்களாக Dynamic அமையும். அதாவது, இயற்கையாற்றல் விளைவுகளை உருவாக்கும் பேச்சாக இருக்கும். சிலர் பேச்சுகள் Comedy எனும் கோமாளித்தனங்களைத் தோற்றுவிக்கும். தங்கு தடையின்றி முழுக் கருத்தையும் தென்றல் நடையில் தெரிவிக்கும் உரையாகவும் சிலர் உரைகள் இருக்கும். வேறு சிலர் பேச்சு Speak Volumes for அதாவது தேவைக்குரிய சான்றுகளை வழங்குவதாக அமையும். விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரது உரைகள் speak without book குறிப்பில்லாமல் நினைவினின்றே புரண்டோடி வுரும் விவரங்களாக விளங்கும். சிலர் பேச்சுகள் Speak well for அதாவது பண்புகளைச் சுட்டிக் காட்டும் சூதுவாது சூழாத வெளிப்படை உரைகளாகவும் இருக்கும். மட்டு மதிப்புடன் கம்பீரமாக Speak One mind பேசுபவராகவும் சிலரிருப்பர். குறிப்பிட்டுக் கூறுவதற்கு ஒன்றுமில்லை என்று சொல்லக் கூடிய Nothing to speak of என்ற பேச்சாளராகவும் போரடிப்பார்கள் சிலர். பேச்சுத் தொடர்பே இல்லாமல் கேட்போர்முக முறிவுகளை உருவாக்கும் Roughly Speaker பேச்சைச் சிலர் பேசுவர். மற்றும் சிலர் குத்து மதிப்பாக Speaking Acquaintance பேசுபவராகவும் இருப்பார்கள்.

எனவே, மேடைகளிலே உரையாற்ற வருபவர்கள் பலவிதமான கருத்துடையவர்களாக இருப்பதால், அவர்களிடம் செய்திச் சேகரிக்கச் செல்பவர் ‘இவர் இப்படி, அவர் அப்படி’ என்று அடையாளம் காண முடியாதவராகவும் இருக்கலாம் இல்லையா?

அதனால், கூட்டங்களில் குறிப்பெடுக்கச் செல்லும் செய்தியாளர், சற்றுக் கவனமாக, விழிப்பாக, எச்சரிக்கையோடு கவனித்து எடுக்க வேண்டிய குறிப்பை மட்டும் எடுத்துக்