பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

319



நான் வெள்ளைக்காரன் பூட்ஸ் நக்கிதான்; அதற்காக வெட்கப்படவில்லை. உண்மையைப் பெருமையோடு ஒப்புக் கொள்கிறேன். ஆனால், காலங்கடந்து இதைச் சிவஞானம் கூறுகிறார். தந்தை பெரியார் இந்தியா விடுதலை பெற்ற நாளைத் துக்க நாளாக அறிக்கை விட்டார். அவர் தலைமையை நான் ஏற்றிருந்தபோதே ஆகஸ்ட் 15ம் நாள், நமக்கும் விடுதலை நாள்தான் என்று தந்தை பெரியாரை எதிர்த்து அறிக்கை விட்டவன் நான். எனது கருத்தை உண்மையான காந்தி பக்தர், தென்னாட்டு காந்தி என்று காங்கிரஸ்காரர்களால் பாராட்டப் பட்ட ஓமந்துார் இராமசாமி ரெட்டியார் போன்றவர்கள் பாராட்டினார்கள். அப்போது நினைத்திருக்க வேண்டாமா? அண்ணாதுரை ஒரு வெள்ளைக்காரன் பூட்ஸ் நக்கி என்று?.

‘காண்டீபம், பேரிகை’ பத்திரிகை நடத்தும் காங்கிரஸ் காரரான எஸ்.எஸ். மாரிசாமி, ‘அமெரிக்கா’ என்றொரு புத்தகம் எழுதி, அதற்கு அரசு பரிசளிப்பு விழா நடத்திட ஒரு குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவின் தலைவர் பக்கா காங்கிரஸ்காரரான கல்வி அமைச்சர் டி.எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார். அவர் அமைத்த குழுவில் என்னையும் ஓர் உறுப்பினராக அவர் நியமித்தார். அப்போது சொக்கா காங்கிரஸ்காரர்கள் நினைத்திருக்க வேண்டாமா ‘அண்ணாதுரை ஒரு வெள்ளைக்காரன் பூட்ஸ் நக்கி’ என்று!

திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அண்ணாதுரையை, காங்கிரஸ்காரர். ஒருவர் எழுதிய புத்தகத்தை ஆய்வு செய்யும் குழுவில் உறுப்பினராகப் போடலாமா என்று சில காங்கிரஸ்காரர்கள் கல்வி அமைச்சர் அவினாசிலிங்கத்தை எதிர்த்துக் கேள்வி கேட்டார்கள்.

அவிநாசியார் அதற்குப் பதிலளித்தபோது, ‘அண்ணாதுரை எந்தக் கட்சியிலே இருந்தாலும் அவர் அழகு தமிழ் பேச்சாளர்; அடுக்கு மொழி பேசும் தமிழர்; அழகானக்