பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



26

பத்திரிகை ஆசிரியராக
தகுதிகள்; திறமைகள்!


த்திரிகை ஒவ்வொன்றிலும், அது நாளேடானாலும் சரி. வார மாத ஏடுகளானாலும் சரி எல்லா வகை இதழ்களின் கடைசிப் பக்கத்தின் இறுதியில், வெளியீட்டாளர் பெயர், முகவரி, அச்சிடுபவர் பெயர், முகவரி, ஆசிரியர் பெயரையும் அச்சிட வேண்டும். இது பத்திரிகைப் பதிவுச் சட்ட விதியாகும்.

‘ஒரு பத்திரிகைக்கு அதன் ஆசிரியர்தான் அச்சாணியாக இயங்குபவர். சட்டப்படியும், நடைமுறைக்கேற்பவும், பத்திரிகையில் வெளிவந்த கருத்துகளுக்கும் வாராதவற்றுக்கும் பொறுப்பேற்க வேண்டியவர் அதன் ஆசிரியரே!

தவறான கருத்துக்கள் வெளி வந்தால், அதற்கும் ஆசிரியர் மீது தான் சம்பந்தப்பட்டவர்கள் வழக்குத் தொடர்வார்கள்.

அவமதிப்புச் செய்திகள் பத்திரிகையில் வெளிவருமானால், நீதிமன்றம், நாடாளுமன்றம், சட்டப் பேரவைகள் முன்பு நிற்கக் கூடியவரும் பத்திரிகை ஆசிரியரே!

பத்திரிகையில் செய்திகளை வெளியிட்டதற்காக, அல்லது வெளியிடாமைக்காக வாசகர்கள் கோபமுற்றால், ஆசிரியர் அமர்ந்துள்ள அறையைத்தான் முதலில் தாக்குவார்கள்; வசைப் பாடுவார்கள்’ என்று Rangaswami, Partha sarathy, Basic Journalism, Macmillan India Ltd., Delhi 1984’ என்ற