பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

363


யின் இடையில் தனியாகச் சிறப்பித்துத் காட்டப்பட வேண்டிய எழுத்து, சொல், சொற்றொடர் ஆகியனவும், மேற் கோள் குறிகளைப் பெறுகின்றன. முன்னதற்குப் பெரும்பாலும் இரட்டைக் குறிகளும், பின்னவற்றிற்குப் பெரும்பாலும் ஒற்றைக் குறிகளும் இடப்படும்.

மேற்கோளுக்குள் மேற்கோள் வரவேண்டுமென்றாலும் ஒற்றைக் குறிகள் இடப்படுகின்றன. இந்த முறைக்கு மாறாக மேற்கோள் குறி இடுவதும் உண்டு.

எடுத்துக்காட்டு :-

1. “யானோ அரசன்? யானே கள்வன்!” என்று அமைந்தான் பாண்டியன்.

2. வடமொழி நூலார் உவமையை ‘உபமானம்’ என்பர்.

3. “இலண்டனுக்குச் சென்றேன். ‘நீர் இந்தியரோ?’ என்று கேட்டார். ஓர் செவ்விந்திய நண்பர்”, என்று அவர் கூறினார்.

4. ‘டில்லிக்குச் சென்றேன். “நீர் சென்னை வாசியோ?” என்று கேட்டார் ஒரு ஆக்ரா நண்பர்’ என்று அவர் கூறினார்.

பிறைக் குறிகள் ( ), [ ]

வாக்கியங்களின் இடையிடையே சிறு விளக்கங்கள் கூறப்படும்போதும், உட்பிரிவுகளுக்கான எண் வரிசைகளுக்கும், மேலும் பிறவற்றிற்கும் பிறைக் குறிகள் போடப்படுகின்றன. பெரிய உட்பிரிவுகளுக்கு []இத்தகைய குறிகளும், சிறிய உட்பிரிவுகளுக்கு ( ) இத்தகைய குறிகளும் இடப்படுகின்றன. இவற்றை ‘அடைப்புக் குறிகள்’ எனவும் கூறலாம்.

எடுத்துக்காட்டு :

(1) தமிழ்நாட்டு வரலாற்றில் சோழர் காலத்தில் (கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு முதல் 12ஆம் நூற்றாண்டு வரை) தமிழில் அரிய காப்பியங்கள் தோன்றலாயின.

(2) அவை யாவன :