பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

377



“மிருக பலத்தைக் கையாளல், பத்திரிகையைத் தலை வணங்க வைத்தல், பல் இளிக்க வைத்தல், முதுகை வளைந்து கொடுக்கச் செய்தல், குதர்க்கமாகப் பேச வைத்தல் போன்றவற்றுக்காக ஒரு பத்திரிகை அஞ்சக் கூடாது”

“இவற்றையெல்லாம் பார்த்து நான் சலித்து விட்டேன். ஜெர்மன் அரசு என்னை ஆசிரியர் பொறுப்பிலே இருந்து விடுதலை செய்து விட்டது. இனி நான் ஜெர்மனியிலே செய்யக் கூடியது ஒன்றுமில்லை. அப்படி ஒருவன் ஜெர்மனியிலே இருக்க வேண்டுமானால், அவன் தனக்குத் தானே பொய்யனாக நடந்து கொள்ள வேண்டும்” என்று கர்ஜித்தார்.

இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு தான் மார்க்ஸ், கீழ் மட்டத்தில் நலிந்து கிடக்கும் ஏழை மக்கள், தொழிலாளர்கள், பொருளாதாரத்தின் மீதுதான் அரசியல் வாழ்வு கணிக்கப்படுகிறது என்பதைத் திட்டவட்டமாக உணர்ந்தார்.

எந்த ஒரு தத்துவமும் மக்களுடைய தொடர்பு பெறாவிட்டால், அதனால் நாட்டுக்கு எந்தவித பயனுமில்லை என்பதைப் புரிந்து கொண்டார்.

இதற்குப் பிறகுதான் ஏழை மக்கள் பொருளாதாரத்தைச் சீரழிப்பது எது? என்று மார்க்ஸ் ஆராய்ந்தார்.

இரும்பு பிடித்தவன் கையும், சொரி பிடித்தவன் கையும் சும்மா இராது என்பதற்கேற்ப, மார்க்ஸ் தனது நண்பர் ஆர்னால்டு ரூஜ் என்பவரின் உதவியோடு பாரீஸ் நகரிலே இருந்து ‘ஃபிரெஞ்சு மலர்’ என்ற பத்திரிகையைத் துவக்கினார்.

‘ஃபிரெஞ்சு மலர்’ 1844-ஆம் ஆண்டில் வெளி வந்தது. அதில் ஜெர்மன் கொடுங்கோல் ஆட்சி பற்றியக் கட்டுரை ஒன்றை மார்க்ஸ் எழுதினார் என்பதற்காக, அந்தப் பத்திரிகையை ஜெர்மன் நாட்டுக்குள்ளேயே, நுழைய விடாமல் தடை செய்துவிட்டது ஜெர்மன் அரசு.

அதற்குப் பிறகு பாரீஸ் நகரிலே இருந்து வெளிவந்த கொண்டிருந்த ‘முன்னேற்றம்’ என்ற பத்திரிகையிலே மார்க்ஸ் பல கட்டுரைகளை எழுதினார். அவை ஒவ்வொன்றும், அரசர்ககள் கடவுளின் பிரதிநிதிகள் என்ற பாமரர்களின்