பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

400

வள்ளலார் இலக்கண நுட்பமும் தேவை!



எனவும், ‘பாணினியம்’ என்ற இலக்கண நூல் தொல்காப்பியத்திற்குப் பிறகு எழுதப்பட்டதாக இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.

தொல்காப்பியம் மிகப் பழந்தமிழ் இலக்கண நூல். தமிழ்மொழிக்கு இலக்கணத்தை கூறுவதோடு மட்டும் இராமல், தமிழ் மக்கள் வாழ்க்கைக்குத் தொடர்புள்ள எல்லாவற்றிற்கும் அது இலக்கணம் கூறுகின்றது. இப்படிப்பட்ட ஒரு நூல் உலக எந்த மொழியிலும் இல்லை என்பது மொழியாய்வு நூலார் முடிவு.

இத்தகைய ஒரு சிறந்த நூலில் எடுத்துக் கூறப்பட்டுள்ள இரண்டு சொற்றொடர்களின் இலக்கண முறைக்கு வள்ளல் பெருமானைப் போன்ற தத்துவஞானி குறை கூறும்போது, மக்களுக்கு வியப்புண்டாகின்றது.

தொல்காப்பியத்திலுள்ள பல சூத்திரங்களைப் பல இடங்களில் வள்ளல் பெருமான் தாம் எழுதிய நூற்களில் மேற்கோளாக ஆட்சி செய்துள்ளார்.

எடுத்துக்காட்டாக, “ஒழிவிலொடுக்கப் பாயிர விருத்திச் சிறப்புப் பாயிரத்தில்” தொல்காப்பியச் செய்யுளிலிருந்து,

                  “பத்தெழுத் தென்ப நேரடிக் களவே
                   யொத்த நாலெழுத் தோற்ற லங்கடைவே”

- தொல்காப்பியம் செய்யுளியல் - 38.

என்ற ஒரு சூத்திரத்தை வள்ளலார் மேற்கோளாக ஆண்டுள்ளார்.

தொண்டை மண்டலச் சதகம் பற்றித் தாம் எழுதியுள்ள உரை நடைப் பகுதியில்,

                  “பனையு மறையு மாவிரைக் கிளவியு
                   நினையும் காலை ய்ம்மொடு சிவனு
                   மையினிறுதி யரைவந்து கெடுமே
                   மெய்யவ னொழிய வெண்மனார் புலவர்”

- தொல்காப்பியம் எழுத்திகாரம் :
உயிர் மயங்கியல் - 81.