பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

41




சிறந்த இலக்குக்குத் தக்கவாறு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

தீமைகளை அகற்றி, நல்ல குணங்களை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

சிற்றின்ப ஆசையும், துன்பமும் வந்து தன்னைத் தாக்கா வண்ணம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

தன்னுடைய நோக்கங்களை, அடைந்திட மனத்தை ஒருவழிப்படுத்தும் தியானத்தைச் செய்ய வேண்டும் என்ற எட்டு நன்னெறிகளை ஒழுக வேண்டும் என்ற ஞான அறிவுரைக் கருத்துக்களை மக்களுக்கு ஊரூராகச் சென்று விளக்கிக் கூறினார். இது செய்தி அல்லவா?

மக்கள் ஆசையை வென்று மகிழ்ச்சியான நிலையை அடைவதற்குரிய பத்துக் கட்டளைகளைச் செய்தியாக புத்தர் உபதேசம் செய்தார்.

கொல்லாமை, களவு செய்யாமை, பிறன்மனை நோக்காமை, பொய் கூறாமை, புறம் பேசாமை, குற்றம் கூறாமை, மது அருந்தாமை, முதியோரைப் போற்றல், பெற்றோர்க்குக் கீழ்படிதல், அறம் செய்தல் போன்ற நெறிகளைப் பின்பற்றல் வேண்டும் என்று அவர் தனது சமயச் செய்திகளாகக் கட்டளையிட்டார்.

கெளதமர், தமது நெறிகளைப் பரப்பவும், பிறரைத் தனது மதத்திற்கு மாற்றவும்; தனது மாணவர்களைக் கொண்ட ஒரு சங்கத்தை உருவாக்கினார். ஆண்-பெண் துறவிகள் அந்த சங்கத்தில் சேர்ந்தார்கள். பிக்குகள், பிக்குணிகள் அனைவரும் எளிய வாழ்க்கையை மேற்கொள்ளச் செய்தார். இவர்கள் தலையை முழுமையாக மழுக்கிக் கொண்டு, மஞ்சள் ஆடைகளை அணிந்து, புத்தம், சங்கம், தர்மம் என்ற மூன்று நிறுவனங்களுக்கு உண்மையாக நடக்க வேண்டும் என்றார். இவை போதி ஞானியின் அறநெறிகளாகத் திகழ்ந்தன. இந்தச் செய்திகளை சர் எட்வின் ஆர்னால்டும், நிஸ்டேவிட்சும்