பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

61


தோன்றினார். புஷ்கின், கோகால், லெர்மண்டோவ் போன்ற ரஷ்ய மேதைகளின் படைப்பு இலக்கியங்களைப் படித்த பூனின்; அவர்களைப் போலவே தானும் ஓர் இலக்கியவாதியாகத் திகழ வேண்டும் என்று விரும்பினார்.

கலை உள்ளத்தோடும், முன்னேற்றச் சிந்தனையோடும் மக்கள் வாழ வேண்டும் என்ற வேட்கைகளின் உந்துதலோடும் கவிதைகளை, கட்டுரைகளை பூனின் எழுதிப் புகழடைந்து வந்தார்.

பல பத்திரிகைகளில் பூனின் எழுத்துக்கள் வெளி வந்து புகழடைந்ததைக் கண்ட ‘ஹாரல் ஹெரால்டு’, “Haral Herald” என்ற பத்திரிகை நிறுவனத்தார் அவரைத் துணை ஆசிரியராக நியமித்துக் கொண்டார்கள்.

சில மாதங்கள் சென்ற பின்பு அதே நிறுவனத்தில் பணியாற்றிய பெண்ணோடு அவர் காதலாடினார்! அதனால் வேலையை விட்டே ஓடினார். அந்த் விரக்தி மேலீட்டால் கவிதை இலக்கியப் படைப்புகளில் தனது மனத்தைத் தீவிரமாக ஈடுபடுத்தி ரஷ்ய இலக்கிய வித்தகர்களைத் திணறடித்தார்.

கவிதை புனைவதோடு நில்லாமல், புகழ்பெற்ற எழுத்தாளர்களான ஆண்டன் செக்காவுடனும், லியோ டால்ஸ்டாயுடனும் அவர் நெருங்கிப் பழகியதால், பூனின் சிறுகதைகளை, நாவல்களை எழுதிப் புகழடைந்தார். அதனால், மேற்கண்ட இரு எழுத்துலக வேந்தர்களிடம் பூனினுக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் வளர்ந்தது.

1897-ஆம் ஆண்டில் வெளிவந்த பூனின் ‘உலக விளிம்பில்’ என்ற சிறுகதை தொகுப்பும், 1898ல் வெளிவந்த ‘விரிந்த வானத்திற்கு அடியில்’ (Under the Open Sky) என்ற கவிதைத் தொகுப்பும், ஆண்டொனாவ் ஆப்பிள்கள், சாசினி என்ற இலக்கியப் படைப்பு நூற்களும் இவான் பூனினை உலக இலக்கிய மேதைகளுள் ஒருவராக நிறுத்தியதால் நோபல் நிறுவனம் அவருக்கு 1933-ஆம் ஆண்டில் பரிசை வழங்கி கெளரவித்தது.