பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

உலக நாடுகளில் உருவான பத்திரிக்கை வளர்ச்சிகள்


பொறுப்பேற்கச் செய்தார். அங்கே சில காலம் பணியாற்றிய கவாபட்டா தனது நண்பர்களுடன் இணைந்து சொந்தமாக ‘பங்கிஜிதாய்’ (Bungei Jidai) என்ற இலக்கியப் பத்திரிகையை ஆரம்பித்து நடத்தி வந்தார்.

அந்த பத்திரிகையில் கவாபட்டா, ‘இஜூரி நகரத்து நடனக்காரி’ எனும் தொடர்கதையை எழுதினார். அந்த நாவல் ஜப்பானிய மக்களைக் கவர்ந்தால், அவருக்கு ஜப்பான் மக்களிடம் பெரியதோர் செல்வாக்கு உருவானது.

இந்த நாவலின் கதாநாயகி ஒரு கன்னிப்பெண். அவள் தனது வாழ்க்கையைக் கடைசி வரை வெற்றிகரமாக நடத்த எடுத்துக் கொண்ட முயற்சிகள் கைகூடாமல், இறுதியில் சோக முடிவைப் பெற்ற இந்த சம்பவம் ஜப்பான் மக்களை மிகவும் கவர்ந்து விட்டதால், அவரது எழுத்து மக்களிடம் புகழ் பெற்று விட்டது.

1933ல் கவாபட்டா ஒரு பிரம்மசாரி இளைஞன் சமுதாயத்தில் உண்டாகின்ற மாறுதல்களை விரும்பாமல் எதிர்த்துப் போராடுகிறான். இறுதியில் மனிதர்கள் சமுதாயத்தில் வாழ்வதைவிட விலங்குகள் இனத்தில் நட்பு கொண்டு அமைதி பெறுவதாக அந்தக் கதை முடிகின்றது. இந்தக் கதையும் ஜப்பான் மக்களிடம் செல்வாக்குப் பெற்றுவிட்டது. ஜப்பான் மக்களிடம் பெரும் புகழ் பெற்றார் கவாபட்டா.

குடும்பங்களில் அடிக்கடி ஏற்படும் பூகம்ப நிகழ்ச்சிகளைத் தனது மற்ற நாவல்களில் சித்தரித்து வெற்றியடைந்தவர் கவாபட்டா.

மக்களிடம் உள்ள சில இனம் புரியாத தவிப்புகளில் ஒன்றான தனிமையின் தவிப்பை மரணம் சம்பவிப்பதற்கு முன்பு அதைச் சொல்லத் தெரியாத ஒருவித இன்ப நுகர்வை தனது கதைப்பாத்திரங்கள் மூலமாக வெளிப்படுத்தும் அவரது ஆற்றலைக் கண்டு உலக இலக்கிய உலகமே திணறியது. அதற்காகவே அவர் 1968-ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்றார்.

இந்த மக்கள் சமுதாய பூகம்ப நிகழ்ச்சிகளை எல்லாம், சில நேரங்களில் சில நாவல்களில் கவாபட்டா தனது இலக்கியப்