பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

85


அந்த ‘கல்கத்தா கெசட்’ இதழை வெளியிட்டார் என்பதால், ‘இதழியல் கலை’ ஆசிரியர் அதனைத் துணைத் தலைப்பின் முதல் செய்தித்தாள் என்றரோ என்னவோ? ஆனால், உள் செய்தியில் ஹிக்கி இதழ்தான் முதல் பத்திரிகை என்று உறுதிபடக் கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஹிக்கி, தன்னை அந்த நாளேட்டில் முன்னாள் அச்சகர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தியப் பத்திரிகை வரலாற்றில் ஹிக்கி வில்லியம் போல்ட்டைப் போல் ஓர் அஞ்சா நெஞ்சர்; ஆனால், செய்தித்தாள் அச்சிடுவதிலே பயிற்சியற்றவர். அதன் மீது எனக்கு ஆசையுமில்லை. நான் கடின உழைப்பாளனுமில்லை. ஆனாலும், எனது மனச் சான்றுக்கும், அறிவிற்கும் விடுதலை வாங்க, இந்தப் பத்திரிகைப் பணியில் எனது உடலை அடிமைப்படுத்திக் கொள்வதில் மகிழ்வடைகின்றேன்’ என்று ஹிக்கி கூறியுள்ளார்.

தான் துவக்கிய நாளேட்டைப் பற்றி ஹிக்கி கருத்றிவித்த போது, ‘எனது பத்திரிகை எல்லாம் பிரிவினருக்கும் உரிய அரசியல் இதழ், வாணிபப் பத்திரிகையான இதில், யாரும் ஊடுருவ முடியாது’ என்று பெருமையோடு குறிப்பிட்டார். அந்த ஏடு இங்லீஷ் மொழியில் வார இதழாக வெளி வந்தது.

வங்காளத்திலுள்ள கல்கத்தா மாநகரில், ஹிக்கி தனது ‘வங்காள கெசட்’ பத்திரிகையை நடத்தி வந்தாலும், அதற்கான எல்லா வகையான செய்திகள், கருத்துக்கள் அனைத்தையும் அப்போது இலண்டன் நகரிலே இருந்து வந்து கொண்டிருந்த “London News” என்ற நாளேட்டுச் செய்திகளில் வரும் குறிப்பிட்டச் செய்திகளைத் திரட்டித் தனது கெசட்டில் வெளியிட்டார். அவ்வளவுக் கருத்துக்களையும் அவர் அப்படியே தனது மொழி நடையில் சிறப்பாக எழுதிப் பிரசுரித்ததால், அந்த ஏட்டிற்கு கம்பெனி பணியாளர்கள் இடையேயும், வெளி மக்களிடையிலும் நல்ல வரவேற்பும், மரியாதையும் வாரத்துக்கு வாரம் பெருகியது.

அப்போது கம்பெனியின் தலைமை ஆளுநராக இருந்தவர் வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு “Waran Hastings”