உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

இதழ்கள்

isł4 இதழ்கள் ஜாஸ்தி, நீ பொறந்த இடத்திலும் நாலு பெண்களுக்கு நடுவு லேருத்துதான் வந்திருக்கே. நீ என்னவோ முதல் பேறு பிள்ளைப்பேறுன்னு மகிழ்ந்துபோயிட வேண்டாம்.” “டே பாபு உனக்கு அம்பிப் பாப்பா வேனுமா, அங் கச்சிப் பாப்பா வேணுமா? நீ சொல்லுடா!” 'முன்னாலே பாப்பா எங்கேம்மா?” பாகியின் முகம் வெட்கத்தில்சிவந்தது. அவனை அனைத் துக்கொண்டு அவன் கழுத்து வளைவில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். அவள் நிறை வயிறின் மேடு அவன்மேல் இடித்தது. நான் ஆஸ்பத்திரியிலிருந்து வரும்போது பாப்பா வோடு வருவேன், பாபு, உனக்குப் பாப்பா பிடிக்குமோ?’ “எனக்குப் பாப்பாவோடு விளையாட ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ஏம்மா அப்போ நான் பக்கத்தாத்துக்குப் போக வேண்டா மோன்னோ? நம்மாத்துப் பாப்பாவோடு விளை பாடலா மோன்னோ?” "ஆமாம். ஆனால் பாகிக்குத் திடீரெனப் பேச்சில் அலுப்புத்தட்டிற்று. ஆனால் பாபுவுக்கு அப்போத்தான் உற் சாகம் கிளம்பிவிட்டது. "நான் விளையாட்டு சாமானெல்லாம் பாப்பாவுக்குத் தத்திடுவேன். நான் பாப்பாவைத் தூக்கிக்கலாமோன்னோ' "ஆஹா, நீ தூக்காமலா?” “பக்கத்தாத்துப் பாப்பாவை நான் தூக்கினால் அந் தாத்து மாமி விடமாட்டேன்கறா. பாட்டி பார்த்தால் கூடத் திட்டறாம்மா." “கீழே போட்டுடுவையோன்னுதான்.” "நான் நம்பாத்துப் பாப்பாவைக் கீழே போடவே மாட் டேம்மா.” “எனக்குத் தெரியும்.” "அதுக்கு விளையாட்டுக் காம்பிச்சுண்டே யிருப்பேன். அது எங்கிட்டையே எப்பவும் இருக்கும். நானும் அதுங் கிட்டையே யிருப்பேன்.” கேரி பாபு, ஆம்மாவைவிடு.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/104&oldid=1247202" இலிருந்து மீள்விக்கப்பட்டது